செவ்வாய், 8 அக்டோபர், 2013

வித்தியா பாலன் :கொழுக் மொழுக் என்று இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் உருவான ‘தி
டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்தவர் வித்யா பாலன். யுடிவி நிறுவன தலைமை செயல் அதிகாரி சித்தார்த் ராய் கபூரை மணந்தார். திருமண குஷியும், ஷூட்டிங்கில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்ததாலும் கூடுதல் வெயிட் போட்டார் வித்யா. இதையடுத்து அவரை பார்க்கும் நண்பர்கள், மீடியாக்காரர்கள் ‘ஏன் குண்டாகிவிட்டீர்கள்? என்று கேட்கத் தொடங்கினர். இதனால் வித்யா கடுப்பானார். யாராவது அவரை, இது பற்றி கேட்டால் உடனே கோபத்தில் முகம் சிவக்கிறார்.வித்யா கூறும்போது, ‘நான் வெயிட் போட்டிருக்கிறேன் என்பதை ஏன்தான் ஏதோ செய்யக்கூடாததை செய்ததுபோல் கேட்கிறார்களோ? இது அவர்களை எப்படி பாதிக்கிறது என்று தெரியவில்லை. இதை ஒரு தேசிய பிரச்னைபோல் கேட்கிறார்கள். கொழுக் மொழுக் என்று இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்காக நான் ஸ்பெஷலாக எந்த பயிற்சியும் செய்வதில்லை. ஆனால் என் தோற்றம் எப்படி எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்கு தேவையானவற்றை செய்கிறேன். அதை ரசிகர்களும் ரசிக்கிறார்கள் என்றார். - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக