திங்கள், 14 அக்டோபர், 2013

சாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் தகவல்

மத்திய பிரதேசத்தின் தாட்டியா மாவட்டம் ரத்தன்கர் ஆற்று பாலத்தில் நேற்று நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.    அப்போது போலீசார் ஈவு இரக்கமின்றி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து ள்ளன.
சாவு எண்ணிக்கையை குறைக்க போலீசார் ஏராளமான சடலங்களை ஆற்றில் தூக்கி வீசினர் என்ற திடுக்கிடும் தகவலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெரிசலில் அதிர்ஷ்டவசமாக தப்பிய பிந்த் நகரை சேர்ந்த கீதா மிஸ்ரா ( வயது 55) என்ற பெண்,  ‘’கடும் நெரிசல் ஏற்பட்டபோது நான் பாலத்தில்தான் இருந்தேன்.   அப்போது கீழே கிடந்த சடலங்களை எடுத்து போலீசார் ஆற்றில் வீசுவதை என் கண்ணால் பார்த்தேன்.   அதில், சிலருக்கு உயிரி இருப்பதையும் கவனித்தேன்.  ஆனால்,  போலீசார் தூக்கி வீசினர்’’ என்று அதிர்ச்சி சம்பவத்தை கூறியுள்ளார்.
ஆசிஷ் என்ற 15 வயது சிறுவன், ‘’என் வயது தம்பி நெரிசலில் சிக்கி இறந்தான்.  அவன் சடலத்தை எடுக்க முயன்றபோது,  போலீசார் என்னை தடுத்தனர்.   நான் எவ்வளவோ கெஞ்சியும் விடவில்லை.   தொடர்ந்து  கேட்டுக்கொண்டே இருந்ததால்,  ‘நீயும் சாவு’எனக்கூறி பாலத்தில் இருந்துஎன்னை தள்ளிவிட்டனர்.  இதில் எனக்கு காயம் ஏற்பட்டது’’என்று அதிரவைத்துள்ளார்.
சடலங்களை ஆற்றில் வீசும்போது நகை, பணத்தை போலீசார் கொள்ளையடித்ததாக பரபரப்பு குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. nakheeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக