வெள்ளி, 25 அக்டோபர், 2013

உலகின் மிக விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களையே மோடி பயன்படுத்துவார் !

நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் – புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
நான் ஏழ்மையில் பிறந்தவன், வறுமை என்னவென்று தெரியும்?” என்று முழங்குகிறார் மோடி. ஆனால், 80% மக்கள் ஒரு நாளுக்கு ரூ 20-க்கும் குறைவான பணத்தில் வாழும் இந்தியாவின் பிரதமராகத் துடிக்கும் மோடி, உடுத்தும் ஆடைகள் முதல், போட்டுக் கொள்ளும் கண்ணாடி, எழுத பயன்படுத்தும் பேனா, கையில் கட்டும் கைக்கடிகாரம் வரை ஐரோப்பிய பிராண்டுகளையும், விலை உயர்ந்த மேட்டுக் குடி மக்களுக்கான ஆடைகளையும் பயன்படுத்துகிறார்.

ஸ்ரீ நரேந்திர மோடியை உருவாக்கும் பிராண்டுகள்- டாக்டர் விக்ரம்

மூக வலைத் தளங்களில் நமோ என்று அறியப்படும் ஸ்ரீ நரேந்திர மோடி அவரளவில் ஒரு மாபெரும் பிராண்டாக உள்ளார். ஆனால், அவருக்கு விருப்பமான பிராண்டுகள் என்னென்ன என்று தெரியுமா?
ஸ்வர்னிம் சங்குல்
மோடியின் ரூ 150 கோடி அலுவலகம்.
மோடிக்கு பிடித்தமான கைக்கடிகாரம் மோவாடோ. 1881-ல் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட மோவாடோ பிராண்ட் பின்னர் கியூப யூதர் குடும்பம் ஒன்றினால் வாங்கப்பட்டது. மோவாடோ பிராண்டின் உரிமையாளர்கள் தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள பாரமஸ் என்ற இடத்தில் செயல்படுகின்றனர்.
பேனாக்களைப் பொறுத்த வரை ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரத்தின் பெயரால் அழைக்கப்படும் மோன்ட்பிளாங்க் பேனாக்கள்தான் ஸ்ரீ மோடிக்கு விருப்பமானவை.
1906-ம் ஆண்டு கிளாஸ் யோஹான் வாஸ் என்ற எழுதுபொருள் வணிகர், ஆல்பிரட் நெகமியாஸ் என்ற வங்கியாளர், மற்றும் ஆகஸ்ட் எபர்ஸ்டெயின் என்ற பொறியாளர் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்ட இந்த பிராண்டை 1977-ம் ஆண்டு டன்ஹில் குழுமம் விலைக்கு வாங்கியது. மலிவான பேனாக்கள் செய்வதை நிறுத்தி விட்டு, ஆடம்பர சொகுசு பிராண்டாக மோன்ட்பிளாங்கை டன்ஹில் கட்டியமைத்தது, டன்ஹில். இன்று கார்ட்டியர், வான் க்ளீஃப், க்ளோயே போன்ற ஆடம்பர பிராண்டுகளின் உடமையாளரான தென் ஆப்பிரிக்காவின் ரூபர்ட் குடும்பத்தின் ரிச்மாண்ட் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளது மோன்ட் பிளாங்க்.
டிசைனர் மோடி
டிசைனர் மேட் மோடி
ஸ்ரீ நரேந்திர மோடியின் தேர்வு புல்காரி பிராண்ட் மூக்கு கண்ணாடிகள்தான். கிரேக்க நகைவணிகர் சோடிரியோஸ் வோல்காரிஸ் புல்காரி பிராண்டை உருவாக்கினார். பின்னர் இத்தாலியின் நேப்பிள்சுக்குப் போய் ரோமில் கடை திறந்தார். 2011-ல் அந்த நிறுவனத்தை எல்விஎம்எச் (லூயி விட்டான்) என்ற சொகுசு பொருட்கள் நிறுவனம் வாங்கியது.
கடைசியாக, ஸ்ரீ நரேந்திர மோடி தனது சூட்டுகளையும், குர்த்தாக்களையும் அகமதாபாத்தில் உள்ள ஜேட் புளூ டிசைனர் ஆடை தயாரிப்பாளர்களிடம் தைத்து வாங்குகிறார். பிபின் சௌகான், ஜிதேந்திர சௌகான் சகோதரர்களுக்கு சொந்தமான இந்த நிறுவனம் 1989 முதல் மோடியின் ஆடைகளை தைத்து வருகிறது. மோடி குர்த்தா என்ற பெயரிட்டு ஒவ்வொரு மாதமும் அவர்கள் விற்கும் சுமார் 2,000 குர்த்தாக்கள் 40 வயதுக்கு அதிகமான வெளிநாட்டு குஜராத்திகளால் பெருமளவு வாங்கப்படுகிறது.
சோனியா காந்தியின் தனி உதவியாளர் அகமது படேலும் இந்தக் கடையில்தான் ஆடைகளை தைத்துக் கொள்கிறார். அவருக்கு அளவு எடுப்பதற்காக பின்னரவு விமானத்தில் டெல்லிக்குப் போய் அளவு எடுத்து விட்டு, அதிகாலை விமானத்தில் திரும்பு வருகிறார் சௌகான் சகோதர்களில் ஒருவர்.
ஆகவே, நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் – புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
ஸ்ரீ நரேந்திர மோடியே ஒரு பிராண்ட்தான் ஆனால், அடுத்த முறை நீங்கள் அவரை தொலைக்காட்சியிலோ சமூக வலைத் தளங்களிலோ அவரை பார்க்கும் போது நரேந்திர மோடி என்ற பிராண்டை உருவாக்கும் பிராண்டுகளை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். மோவாடோ கைக்கடிகாரம், மோன்ட்பிளாங்க் பேனா, புல்காரி கண்ணாடி, மோடி குர்த்தா இவற்றை கண்டுபிடியுங்கள்.
நன்றி : Desibrandstrategy.com
ஏழைகளின் நண்பன்
நான் ஏழ்மையில் வளர்ந்தவன், வறுமையை அறிந்தவன்
1. டிசைனர் ஆடைகள்
2. ரூ 150 கோடி செலவிலான அலுவலகம்
3. Z+ பாதுகாப்பு
4. வெளிநாட்டு கண்ணாடிகள்
ஆண்டவன் எல்லோரையும் இப்படி ஏழையாக படைக்க மாட்டானா!
மேலும் விபரங்களுக்கு
  1. மோவாடோ கைக்கடிகாரங்கள் – ரூ 20,000 முதல் ரூ 70,000 வரைMovado Watches
  2. மோன்ட்பிளாங்க் பேனா – ரூ 30,000 முதல் ரூ 70,000 வரைMontblanc pens
  3. புல்காரி கண்ணாடி – ரூ 10,000 முதல் ரூ 20,000 வரை
  4. மோடி குர்த்தாNarendra Modi’s personal tailor
  5. 150 கோடி அலுவலகம்Inside Narendra Modi’s Rs 150 crore office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக