வியாழன், 17 அக்டோபர், 2013

கொத்தடிமைகள் ! இந்தியாவுக்கு முதலிடம் ! வாழ்க அம்பானிகளின் தேசம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாக் ப்ரீ என்ற மனித உரிமை அமைப்பு, 162
நாடுகளில் அடிமைத்தனம் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கட்டாய வேலை, கடன்களால் பாதிப்பு, அடிமைத்தன பிறப்பு என உலகம் முழுவதும் சுமார் 30 மில்லியன் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. உலகில் உள்ள கொத்தடிமைகளில் பாதி பேர், அதாவது 13.9 மில்லியன் பேர் இந்தியாவில் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. கல்குவாரிகள் மற்றும் உலைகளில்தான் அதிக அளவில் கொத்தடிமைகள் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. சீனாவில் 2.9 மில்லியன் கொத்தடிமைகள் உள்ளனர். பாகிஸ்தானில் 2.1 மில்லியன் பேரும், நைஜீரியாவில் 7 லட்சத்து ஆயிரம் பேரும், எத்தியோப்பியாவில் 6  லட்சத்து 51 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரும் உள்ளனர்.


தாய்லாந்தில் 4 லட்சத்து 73 ஆயிரம் பேரும், காங்கோவில் 4 லட்சத்து 62 ஆயிரம் பேரும், மியான்மரில் 3 லட்சத்து 84 ஆயிரம் பேரும் வங்காளதேசத்தில் 3 லட்சத்து 43 ஆயிரம் பேரும் அடிமைகளாக உள்ளனர். மொத்த கொத்தடிமைகள் எண்ணிக்கையின் முக்கால் பங்கு 10 நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக