சனி, 19 அக்டோபர், 2013

மாருதி ! காதலியின் பெயரை காருக்கு சூட்டிய சஞ்சய் காந்தி ! ஒரு வில்லங்க வரலாறு !

மாருதி கார், ஓல்டு மங் ரம்.. பட்டி
தொட்டியெங்கும் நிறைந்துவிட்ட பெயர்கள். ஆனால், இரண்டுக்கும் என்ன தொடர்பு? இந்த கேள்விக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய காதல் கதை பொதிந்துள்ளது. மாருதி நிறுவனத்துக்கு சஞ்செய் பெயர் வைத்ததன் பின்னால் சுற்றிச் சுழலும் இந்த காதல் கதை இந்திரா காந்தி குடும்பத்தையும், அரசியல் மற்றும் வர்த்த உலகையும் ஒரு காலத்தில் ஆட்டியெடுத்தது. அதுபற்றிய ஒரு மசாலா கதையுடன் செய்தித்தொகுப்பு.
ஊர் சுற்றிய சஞ்செய்
இயற்கையிலேயே முரட்டு சுபாவம் கொண்ட இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்செய் காந்தி பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே இருந்து குடைச்சல் கொடுத்து வந்துள்ளார். அவரை படிப்பை தொடருமாறு இந்திரா காந்தி பல முறை வற்புறுத்தியும் காதில் வாங்கவில்லை. அதையடுத்து, சஞ்செய் காந்தியை வலுக்கட்டாயமாக இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார் சஞ்செய்.

கடிவாளம்
சஞ்செய் காந்திக்கு கடிவாளம் போட எண்ணிய இந்திரா காந்தி புதிய பொறுப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தார். ஹிட்லருக்கு இருந்த மக்கள் கார் கனவு காரணமாக ஃபோக்ஸ்வேகன் பிறந்தது. அதுபோன்றே, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் இந்தியாவிலேயே குறைந்த விலை காரை தயாரித்து வெளியிட விருப்பம் இருந்தது. இதன்மூலம், நாட்டின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் உதவும் என்று கருதினார். அந்த கார் நிறுவன பொறுப்பை சஞ்செயிடம் வழங்க முடிவு செய்தார்.

அங்கும் பிரச்னை இங்கிலாந்து அனுப்பியவுடன் இந்திரா காந்திக்கு தலைவலி ஓய்ந்துபோய்விடவில்லை. அங்கு சென்ற சஞ்செய் வழக்கம்போல் பிரச்னைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கினார். ஒருமுறை குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியதற்காக கைத.
கார் கம்பெனி லைசென்ஸ்
1971ல் கார் நிறுவனம் துவங்குவதற்கு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. அந்த கார் நிறுவனத்தை துவங்குவதற்கான உரிமம் சஞ்செய் காந்தியிடம் வழங்கப்பட்டது. ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் பயிற்சி முடித்ததை தவிர சஞ்செய் காந்தியிடம் கார் வேறு எந்த ஒரு அனுபவமும் இல்லை. மேலும், சஞ்செய் காந்திக்கு கார் நிறுவனம் உரிமம் வழங்கியது அரசியல் உலகில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ்  கட்சியிலேயே  புகைச்சல் இருந்தது. ஆனால், இந்திரா காந்தியை தாண்டி மூத்த காங்கிரசாரால் எதுவும் செய்ய இயலவில்லை.

குற்றச்சாட்டு
மாருதி என்ற பெயரில் கார் நிறுவனம் துவங்கப்பட்டது. கார் நிறுவனம் துவங்குவதற்காக அளிக்கப்பட்ட அனுமதியை வைத்து சஞ்செய் காந்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் எதிரொலியால் மாருதி கார் நிறுவனத்துடன் ஃபோக்ஸ்வேகன் உள்பட பல்வேறு கார் நிறுவனங்கள் சஞ்செய் காந்தியின் கார் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.


சோனியா காந்தி நியமனம்
கார் நிறுவனத்துக்காக அரசு வழங்கிய 330 ஏக்கர் நிலத்தை சஞ்செய் காந்தி தன் பெயருக்கு மாற்றிக்கொண்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும், பல சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில், சோனியா காந்தியை கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சஞ்செய் காந்தி நியமித்தார். அவருக்கு மாதச் சம்பளம் ரூ.2,000 வழங்கப்பட்டது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளால் எழுந்த எதிர்ப்பின் காரணமாக எஸ்.குப்தா தலைமையிலான விசாரணை குழுவை இந்திரா காந்தி அமைத்தார். ஆனால், அந்த அறிக்கைகள் ஏனோ இதுவரை வெளிவரவில்லை. மேலும், அனுபவம் இல்லாத சோனியா காந்தியை கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமித்ததை மட்டும் குப்தா விசாரணை கமிட்டி தவறாக சுட்டிக் காட்டியது.

ஓல்டு மங்கும், மாருதியும்….
ஓல்டு மங்க் மதுபான ஆலை அதிபரும், அப்போது ராஜ்ய சபா எம்பி.,யாவும் இருந்த பிஆர். மோகன் சஞ்செய் காந்திக்கு நெருக்கமாக இருந்தார். இந்த நெருக்கத்தின் காரணமாக மாருதி கார் நிறுவனத்தில் பங்குகளையும் வைத்திருந்தார். தனது காதலின் நினைவாகவே மாருதி என்ற பெயரை கார் நிறுவனத்துக்கு சஞ்செய் வைத்தார்.
அடுத்த பிரச்னை
பிஆர். மோகனின் மகள் மாருதிக்கும், சஞ்செய் காந்திக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. ஆனால், திருமணம் குறித்த பேச்சுக்கள் எழுந்தபோது, சஞ்செய் காந்திக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க மோகனுக்கு விருப்பமில்லை. இதனால், சஞ்செய் – மோகன் இடையிலான நெருக்கம் சட்டென விட்டது.
இன்னொரு ரூட்
இந்த கதை ஒருபுறம் சென்று கொண்டிருக்கும்போதே பாம்பே டையிங் விளம்பரத்தில் டவல் கட்டி நடித்து பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி மேனகாவுக்கும், சஞ்செய் காந்திக்கும் நெருக்கம் இருந்ததாக ஒரு கதை றெக்கை கட்டி பறந்தது. மாருதி- சஞ்செய் காந்தி காதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சஞ்செய் காந்திக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். பலரது எதிர்பார்ப்புபடியே மேனகாவை சஞ்செய் காந்திக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்து அதை நிறைவேற்றினர்.
ஆனால்…
மேனகா காந்தியுடன் திருமணம் முடிந்தாலும், மாருதி மீதான காதல் சஞ்செய் மனதை விட்டு அகலவில்லை போலும். இதனாலோ என்னவோ, திருமணம் முடிந்து போன பின்பும் மாருதி கார் நிறுவனத்தின் பெயரை அவர் மாற்றவில்லை. மேலும், மாருதி நிறுவனத்தை தனது தாஜ்மஹாலாகவே சஞ்செய் கருதியிருப்பார் என்றே தோன்றுகிறது.
எல்லாம் தோல்வி
மாருதி நிறுவனம் மூலம் பல கார்களை சஞ்செய் காந்தி வடிவமைத்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் சோதனை மையங்களுக்கு அனுப்பி வைப்பார். ஆனால், அவை தரக் குறைபாடுகளால் அங்கீகாரம் பெறவில்லை. அவரது நிர்வாகத்தில் அனுப்பிய ஒரு கார் கூட அங்கீகாரம் பெறவில்லை. இதனால், விரக்தி ஏற்பட்டு கார் வடிவமைப்பை விட்டுவிட்டு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.
முதல் மாருதி
முதல் மாருதி காரின் சாவியை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வாடிக்கையாளர் கையில் வழங்குகிறார். முதல் மாருதி கார் ரூ.50,000 விலையில் விற்பனைக்கு வந்தது.
கார் ஆலையில் சஞ்செய்
மாருதி கார் ஆலையில் சஞ்செய் காந்தி.
மேனகா விளம்பரம்
சஞ்செய் – மேனகா தம்பதியினர் மற்றும் பாம்பே டையிங் விளம்பரத்தில் மேனகா காந்தி இருக்கும் படம்.  ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக