திங்கள், 28 அக்டோபர், 2013

BJP : ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் தாமரை கொடி பறக்க வேண்டும் ! ஒவ்வொரு தமிழன் காதிலும் பூ சூட்ட வேண்டும் !

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஈரோட்டில்  நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி யில் பாஜக மாநிலத் தலைவர் அன்று என்னிடம் பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன் வைத்தனர். ஆனால் நான் அவர்களிடம் 6 மாதத்திற்கு பின்பு கேளுங்கள் என்று கூறினேன்.
பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர், ‘’ பாரதிய ஜனதாவை மதவாத கட்சி என்று கூறுகிறார்கள். ஆனால் ஏன் , எதற்கு அப்படி சொன்னார்கள் என்று சொன்னவர்களுக்கும் தெரியாது. கேட்பவர்களுக்கும் தெரியாது. அரசியலில் தேச பக்தியை ஊட்ட வேண்டும் என்று கூறிய கட்சி தான் பாஜக. பாஜக வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.தமிழகத்தில் பாஜக வளரக்கூடாது என்று கூறிய அரசியல் கட்சிகள் பல, நம்முடன் கூட்டணி வைக்க முயற்சி செய்துவருகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 30- ம் தேதி பாரதிய ஜனதா மாநில தலைவர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.
 கடந்த 2010 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஜூலை போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இணையாக ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சமநீதி மற்றும் சம நிதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
அக்.18-ம் தேதி சென்னை வந்த நரேந்திர மோடி, பாஜக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களை சந்தித்து பேசியதுடன், தான் அடிக்கடி காலமாக தமிழகத்துக்கு வருவதாக கூறினார். வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மோடியை தமிழகத்திற்கு அழைப்போம் என்றால் இந்தியாவில் எல்லா மாநிலம் மிஞ்சும் அளவுக்கு நம்மால் நிகழ்ச்சி நடத்த முடியும்.
  ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் தாமரை கொடி பறக்க வேண்டும். பீகார் மாநிலம் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை மோடி பங்கேற்ற மாநாட்டில் குண்டு வெடித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் கூறிகின்றனர். சரியான தகவல் இல்லை. நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தை சிதைப்பது மட்டுமல்ல  மோடியை சிதைப்பது தான் தேச துரோகிகள் எண்ணமாக உள்ளது.  இந்தியாவை அழிக்க மோடியை அழித்தால் போதும் என்று தேச விரோதிகள் எண்ணி வருகின்றனர். வருகிற காலத்தில் இளைஞர்களை இலவசம் கொடுத்து ஏமாற்ற முடியாது.

 1966 ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியைதோற்கடிக்க தி.மு.க. கையில் எடுத்த ஆயுதம் தமிழன், தமிழகம், தமிழ். ஆனால்திமுக வெற்றி பெற்று 1967-ம் ஆண்டு ஆட்சியமைத்த போது அவர்கள்தமிழகத்தை மறந்துவிட்டனர்.

47 ஆண்டுக்கு பின்பு அனைத்து கல்லூரி மாணவர்களும் மோடி பிரதமராக வேண்டும் என்று களம் இறங்கியுள்ளனர். பல கல்லூரிகளில் மோடியின் கல்லூரி என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது மோடிக்கு ஆதரவாக மாணவர்கள் களம் இறங்கியுள்ளனர் என்பதை காட்டுகிறது.

 பாஜக உறுப்பினர்கள் முழு நேர ஊழியராக மாற வேண்டும்.  வரும் டிசம்பர் மாதம் வீடுதோறும் மோடி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் பாதயாத்திரையாக சென்று மோடிக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளோம்’’ என்றார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக