வியாழன், 31 அக்டோபர், 2013

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க (5 லட்சம்) லஞ்சம் ! அங்குசம் பட தயாரிப்பாளரால் வெளிவந்த உண்மைகள் !

 சென்னை: திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க லஞ்சம்
மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது குறித்த பிரச்னைகள் அதிகமாகி கொண்டிருக்கிறதே?
இந்த பிரச்னை குறித்து ஒரு ஆங்கில  இதழில் கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், தமிழ்த் திரைப்படங்களுக்கு தரப்படும் கேளிக்கை வரிவிலக்கு முறையாகத்தான் அளிக்கப் படுகிறதா என்கிற கேள்வியை அண்மைச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன; அங்குசம் திரைப்பட இயக்குநர் மனு கண்ணன் தன் படத்திற்கு வரி விலக்கு தர லஞ்சம் கேட்டதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டி னார்.  மறுநாளே அங்குசம் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸின் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சங்கத்துக்கு அளித்த புகாரில், தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். நான் ஏற்கனவே ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. தமிழக மீனவர்கள் வாழ்க்கையைக் கதை களமாகக் கொண்ட படம் நீர்ப்பறவை அதற்குப் பட விழாக்களில் விருது கிடைத்தது.  தமிழக அரசோ அந்தப் படம் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான படம் என்று சொல்லி வரி விலக்கு தர மறுத்தது.

வழக்குத் தொடர்ந்தேன். நீதிமன்றம் தடை உத்தரவு அளித்தது. சமீபத்தில் வெளியான வணக்கம் சென்னைக்கும் வரி விலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித் தும் வழக்குத் தொடர்ந்துள்ளேன் என்று அந்த இதழில்  தெரிவித்தார் உதயநிதி. அங்குசம் இயக்குநர் மனு கண்ணனிடம் பேசிய போது, வரி விலக்கு சான்றிதழ் வாங்கச் சென்ற  ரூ5 லட்சம் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் கொடுக்க மனசாட்சி இடம் தரவில்லை. சினிமா நண்பர்களிடம் விசாரித் தேன். இது இங்கே சகஜம்தான். பணத்தைக் கொடுத்து விட்டு வேலையை முடிக்கச் சொல்லி அறிவுறுத் தினார்கள். எனக்கு மனம் வரவில்லை. பத்திரிகை பேட்டியில் உண்மைகளைச் சொன்னேன்.  சம்பந்தப்பட்டவரை  இடை நீக்கம் செய்திருக்கிறது அரசு  என்று கூறியதாக  அந்த இதழ்  கட்டு ரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டுவதாக அதிமுக அரசு அறிவித்ததற்கிணங்க, அவற்றைக் கட்டுவதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே? 9,5,2013ல் முதல்வர் ஜெயலலிதா பேரவையில் படித்த 110 விதியின் கீழான அறிக்கையில், 226 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. எஞ்சியுள்ள 68 விடுதிகளுக்கு நடப்பாண் டில் ரூ86 கோடியே 97 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.  இந்த அறிவிப்புக்கான அரசாணைதான் தமிழக அரசின் சார்பில் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதைப் போலத்தான் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்ட உணவுப் படிகள் போன்றவற்றை வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்று நான் எழுதிய பிறகு, அரசு அதற்கான ஆணை களை பிறப்பித்தது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளுக்கான அரசாணையும் என்னுடைய இந்தக் கருத்துக்கு பிறகு அரசின் சார்பில் பிறப்பிக்கப்பட்டு விடுமென்று நம்புகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்
dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக