புதன், 9 அக்டோபர், 2013

பணிப்பெண்களாக சென்றவர்களில் 463 பேர் சடலங்களாக அனுப்பப்பட்டனர்

பணிப்­பெண்­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து  மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்­
ற­வர்­களில் 463 பேர் கடந்த வரு­டத்தில் சட­லங்­க­ளாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 300க்கும் அதி­க­மானோர் 30 வய­துக்கும் குறை­வா­ன­வர்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரஞ்சன் ராம­நா­யக்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் கேள்­வி­யொன்றைத் தொடுத்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்ட தக­வலை வெளி­யிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,
சட்­டங்­களும் கட்­டுப்­பா­டு­களும் மீறப்­பட்ட நிலையில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்வோர் அங்கு பல்­வேறு கொடு­மை­க­ளையும் சித்­தி­ர­வ­தை­க­ளையும் அனு­ப­விக்­கின்­றனர் இதே­வேளை, 2012ஆம் ஆண்டில் மாத்­திரம் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து 463 பணிப்­பெண்­களின் சட­லங்கள் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 300க்கும் அதி­க­மா­னவை 30 வய­துக்கும் குறை­வான பெண்­க­ளு­டை­ய­தாகும். இவர்கள் மார­டைப்பின் கார­ணத்­தி­னா­லேயே மர­ணித்­தி­ருப்­ப­தா­கவும் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.
இவ்­வாறு பணிப்­பெண்­க­ளாக செல்வோர் உட­ல­ளவில் ஆரோக்­கி­ய­மா­ன­வர்கள் என்ற மருத்­துவ சான்­றிதழும் வழங்கப்படு­கின்­றது. நிலைமை இவ்­வா­றி­ருக்கும் போது எப்­படி இவ்­வ­ளவு பெரும் தொகை­யினர் மார­டைப்பால் மர­ணிக்க முடியும்?
இலங்­கைக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கின்ற உடல்­களில் காயங்கள் காணப்­ப­டு­கின்ற அதே­வேளை உடலின் சில உறுப்­பு­களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, இது குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், பணிப்பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார். ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக