வியாழன், 24 அக்டோபர், 2013

அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 42 குழந்தைகள் கடத்தல்: ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டில் 42 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி குழந்தை ஒன்று காணாமல் போன வழக்கில், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை தலைவர் ராமானுஜம் ஆகியோர் சார்பில் தனித்தனியாக விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதில், கடந்த ஓராண்டில் அரசு மருத்துவமனைகளில் இருந்து 42 குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும், அதில் 27 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குழந்தைகளை கண்டறிய சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக