சனி, 12 அக்டோபர், 2013

டிஜிடல் சினிமா! சுமார் 400 தமிழ் படங்கள் தயாரிப்பில் ! தற்போது யாரும் படம் தயாரிக்கலாம் ஆனால் ரிலீஸ் ?

ராவண தேசம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில்
அஜெய் நூத்தகி கதாநாயகனாக நடித்து இயக்குகிறார். இதன் பாடல் விழாவில் கேயார் பேசியதாவது:– தமிழில் தற்போது நிறைய படங்கள் தயாராகி வருகிறது. பிலிம் இல்லாமல் டிஜிட்டல் படங்கள் எடுக்கலாம் என்ற நிலை வந்த பிறகு குறைந்த முதலீடு செய்து நிறைய பேர் படம் எடுக்க வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குப்படி தற்போது 400 முதல் 450 படங்கள் புதிதாக தயராகி வருகின்றன. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் படங்கள் தயாரிக்கலாம். ஆனால் அதை ரிலீஸ் செய்வதுதான் கஷ்டமானது. விளம்பரம், விநியோகம் செய்தல், தியேட்டர் என பல நிலைகளை தாண்டிதான் ஒரு படம் ரிலீசாக வேண்டி இருக்கிறது.
சிறிய படமாக இருந்தாலும் விளம்பரத்துக்கு மட்டும் ரூ.1 கோடி வேண்டும். அப்படியென்றால்தான் அது மக்களை சென்று அடையும். பெரிய படங்களுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை விளம்பரத்துக்கு செலவு செய்கிறார்கள். இதுபோன்ற செலவுகள் குறைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தயாரிப்பாளர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி விழாவில் பேசும்போது அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அம்மா தேசம் என்ற பெயரில் படமாக எடுக்க உள்ளேன். முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு நிறைவேற்றிய அனைத்து சரித்திர சாதனை திட்டங்களும் இப்படத்தில் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர்கள் பிரமிட் நடராஜன், லட்சுமி காந்த், நடிகர்கள் சந்தோஷ் வாசன், கார்த்திக், நாயகன் அஜெய், நாயகி ஜெனீபர், இசையமைப்பாளர் சிவன், பாடலாசிரியர் சுரேஷ் ஜித்தன் ஆகி யோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக