திங்கள், 21 அக்டோபர், 2013

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் ! ரஷ்யாவில் ஒப்பந்தம் ! விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தரவேண்டியதில்லை ?


ராதாபுரம் : நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ஏற்கெனவே 2 அணுஉலைகள் உள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் 2 அணு உலைகள் அமைக¢கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளார். இதனை கண்டித்து நேற்று இடிந்தகரையில் அணுசக்திக¢கு எதிரான மக¢கள் இயக¢கத்தின்  ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார் பேசுகையில், ‘அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பற்றி எதுவும் இதுவரை எந்த ஒப்பந்தங்களிலும் தெரிவிக¢கப்படவில்லை. ஆனால், விபத்து ஏற்பட்டால் எந்த ஒரு இழப்பீடும் தரவேண்டியதில்லை என்ற ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கையெழுத்திட சென்றுள்ளார். இதனை கண்டிக்கிறோம். மேலும் அணு உலைகள் அமைப் பது தொடர்பாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல, பிரதமரின் ரஷ்ய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உவரி பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக