வியாழன், 31 அக்டோபர், 2013

ஜில்லா : விஜய்க்கு 20 கோடியை கொடுத்துவிட்டு ஏனையோரின் சம்பளத்தை இன்னும் கொடுக்க வில்லையாம்? கண்ணீர் விடுறாங்க ,

ஜில்லா! இளைய தளபதி விஜய் - மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் காம்பினேஷனில் அறிமுக டைரக்டர் நேசன் இயக்கத்தில்  சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் பிரம்மாண்ட படைப்பு. 2014   பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணும் தீவிரத்தில் படு ஜரூராக ஷூட்டிங் நடந்து வருகிறது.    போலீஸ் அதிகாரி யாக விஜய் நடிக்கும் காட்சிகள் ‘தளபதி’யின் ரசிகர்களுக்கு தித்திப்பான கரும்புச்சுவையாக இருக்கும்  என இப்போது கோலிவுட்டில் பரபர டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவர் நடிச்ச சீன்கள் எல்லாம் தித்திப்பாகத்தான் இருக்கும். ஆனா, இந்த தீபாவளி எங்களுக்கு கசப்பா போயிருச்சே,  எங்க சந்தோசமெல்லாம் தண்ணியில ஊறுன பட்டாசு மாதிரி நமத்துப்போச்சே’’ என புலம்பித் தவிக்கிறார்கள்.   ஜில்லா படக்குழுவினர்.

கடந்த மூணுமாதமாக படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள், டான்ஸர்கள் என யாருக்குமே சம்பளம் தரவில்லையாம்.  ‘ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்ததும் தர்றோம்னு சொன்னார் கள்.  முடிஞ்சு வந்தபிறகு தீபாவளிக்கு தர்றோம்னு  சொன்னார்கள்.  ‘சரி’ன்னு சவுத்ரி ஆபீசுக்கு மேனேஜர் பாபுகிட்டே கேட்டோம்.   அவரு கேஷியர் ராஜூவை பாருங்கன்னு சொன்னாரு.    அவரைப் பார்த்தா... ஆபீஸ் இன்சார்ஜ் சிவாவைப் பாருங்கன்னு சொன்னாரு.
அவரைக்கேட்டா நீங்க கேஷியரைத்தான் கேட்கணும்ணு சொல்றாரு.   இப்படியே எங்களை சுத்தலில் விட்டு கடைசியில எங்களுக்கு கைவிரிச்சிட்டாங்க.
என்ன விபரம்னு கேட்டா,  ‘’ விஜய்க்கு 20 கோடி ரூபாயை கொடுத்திட்டோம்.   அப்பத்தான் அவரு நவம்பர் 6ம் தேதியிலிருந்து மதுரையில நடக்குற ஷூட்டிங்குக்கு வருவாரு.  அப்படின்னு அவுங்க பேசிக்குறாங்களாம்.   அவுங்க கம்பெனி ஆபீஸ் பாய்க்கே மூணு மாசமா சம்பளம் கொடுக்கலையாம். என்னத்த சொல்றது’’ நொந்து  போய் புலம்புகிறார்கள் தொழிலாளர்கள். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக