வெள்ளி, 11 அக்டோபர், 2013

உபி மக்களிடம் துப்பாக்கிகள் 11 லட்சம் உள்ளன போலீசாரிடமோ வெறும் 2.25 லட்சம்

லக்னோ: பொதுநல வழக்கு மூலம் மாநிலத்தில் போலீசாரை காட்டிலும்
பொது மக்களிடம் அதிகளவில் துப்பாக்கிவைத்திருப்பதை அறிந்த அலாகாபாத் நீதமன்றம் வரும் காலங்களில் புதிய உரிமம்வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.11லட்சம் துப்பாக்கி: உ.பி., மாநிலத்தில் பொதுமக்களிடம் மக்களிடம் புழங்கும் ஆயுதம் குறித்து ஜிதேந்தர் சிங் என்பவர் அலாகாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி மாநில உள்துறை முதன்மை செயலாருக்கு அலாகாபாத் நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் மதீ்ன் மற்றும் சுதீர்குமார் சக்சேனா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர்.
இதனைதொடர்ந்து மாநிலத்தில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 133 பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு 11 லட்சத்து 22 ஆயிரத்து 844 துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கின் படி 11லட்சத்து 4 ஆயிரத்து 701 துப்பாக்கிகள்உள்ளன. மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாரின் எண்ணிக்கை மாநிலம் முழுமைக்கும் 2லட்சத்து 13 ஆயிரம் பேர் வரை மட்டுமே பணிபுரிகின்றனர்.
அவர்களிடம் 2 லட்சத்து 25 ஆயிரம் வரையிலான துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநில போலீசாரை காட்டிலும் பொது மக்களிடம் புழங்கும் துப்பாக்களின் எண்ணிக்கை 5 மடங்கு வரையில் அதிகரித்து காணப்படுகிறது என அறிக்கை அளித்தார்.
நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு:


உள்துறை செயலாளரின் அறி்க்கை குறித்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இது குறித்த விசாரணையை வரும் நவம்பர் மாதம் 25-ம் தேதிக்கு ஒததி வைப்பதாக கூறினர். மேலும் பொதுமக்களுக்கு ஆயுதம் வழங்குவதில் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய கட்டு்ப்பாடுகள் குறித்தும் அறிவுரை வழங்கினர்.
மத்திய மாநில அரசுகள் போலீசாரிடம் மற்றும் பொது மக்களிடம் புழங்கும் ஆயுதங்கள் குறித்த சமநிலையை கண்காணிக்க வேண்டும் . மேலும் ஒரு நபர் மூன்றுக்கும் மேற்பட்ட லைசென்சுகளை பெறும் போது அவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். மாநில அரசு துப்பாக்கி லைசென்சு வைத்துள்ளவர்கள் மீது உள்ள குற்றவழக்கு மற்றும் நிலுவையில் உள்ள வழக்களை தெரிவிக்க வேண்டும். மேலும் மாநில அரசு லைசென்சுகளை வழஙகுவதை குறைப்பதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகள், புதிய லைசென்ஸ் சட்டம் குறித்த திட்டத்தை தெரியப்படுத்த வேண்டும். மேற்கண்டவைகள் வரும் நவம்பர் 25ம் தேதியன்று வரும் விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மாநிலத்தில் நடைபெறும் கொலைகள் பெரும்மாலும் துப்பாக்கி மூலமே நிகழ்வதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளதாக அலகாபாத் நீதிமன்றம் சுட்டிகாட்டியுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக