வியாழன், 26 செப்டம்பர், 2013

மோடி. நீரா ராடியா. tata கனெக்ஷன் பற்றி மூச்சு விடாத சோ ! ராசாவை ஏன் ரவுண்டு கட்டி அடித்தான் ?

அலைக்கற்றை ஊழலை
டாடா - மோடி - ராடியா
ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்ல மோடியின் சந்நிதியில் கலெக்டரே மண்டியிட்டு வணங்கும் மாநிலத்தில், ரொம்ப தெனாவெட்டாக கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்காகளே ஒரு பொம்பிளை -
அது யாருன்னு தெரியுதா?
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் நீரா ராடியாதான்.
இது 25 நவம்பர் 2010-ல் எடுத்த படம்.
  • அலைக்கற்றை ஊழல் பற்றிய சி.ஏ.ஜி அறிக்கை வெளியான தேதி – நவம்பர் 10, 2010.
  • “ராடியா டேப்புகளை” ஓபன் மாகசீன் வெளியிட்ட தேதி – நவம்பர் 20, 2010
  • இந்த செய்தியும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கும் தேதி நவம்பர் 25, 2010
இந்த படத்தை வெளியிட்டுள்ள “தேஷ் குஜராத்” இணைய தளம், அம்மையாரை குஜராத்தின் மருமகள்” என்று கொட்டேசனில் போட்டுள்ளது. எதுக்காக குசும்பா கொட்டேசன்ல போட்ருக்குன்னு விவரம் சொல்லணுமில்ல? சொல்லலியே!
நல்லாத் தர்றாங்கய்யா டீட்டெய்லு!
NaMo (நமோ) கறை படியாத கரமாச்சே! புரோக்கர், ஊழல், கமிசன்னு யாராவது பேசினா சுட்டுத்தள்ளிடுவாருன்னு அர டவுசர் அம்பிக சொல்றாங்களே! ஒரு வேளை அம்மா ஒரு புரோக்கர்னு அய்யாவுக்கு தெரிஞ்சிருக்காதோ!
“அட போய்யா, அம்மாவோட அய்யாவுக்கு பிசினஸ் கனைக்சன் 2004 இலேயே உண்டு”ன்னு சொல்லியிருக்கிறார் கிங் சுக் நாக் என்ற டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையாளர்.
அவருடைய டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை வெளிவந்திருக்கும் தேதி நவம்பர் 22, 2010.
இனி, கிங் சுக் நாக் எழுதியுள்ளதிலிருந்து சில பகுதிகள்:
“2003 இல் நான் டைம்ஸ் ஆப் இந்தியா அகமதாபாத்தின் ஆசிரியராக இருந்தேன். நீரா ராடியா என்னைப் பார்க்க விரும்புவதாக என்னிடம் ஒரு நண்பர் சொன்னார்…
அடுத்த முறை நான் டெல்லி வந்தபோது, ராடியாவின் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். போன, வந்த கதையையெல்லாம் கொஞ்சம் பேசி விட்டு, நைசாக விசயத்துக்கு வந்தார் ராடியா. “நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எல்லாம் மோடியை சித்திரவதை செய்து வருகிறீர்கள். அவரையும் அவருடைய கொள்கையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கங்களேன்” என்றார்.
“டாடாவுக்கு அடுத்தபடி, மோடியும் உங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் சேர்ந்து விட்டாரோ” என்று நான் ராடியாவிடம் கேட்டேன்.
“சே சே குஜராத்தின் மருமகள் என்ற முறையில் என் கடமையை செய்கிறேன்” என்றார் ராடியா.
“குஜராத் அரசைப் பற்றி (இனப்படுகொலையைப் பற்றி) நாங்கள் எழுதுவது எல்லாம் உண்மை விவரங்களின் அடிப்படையிலானது. அதை எப்படி நாங்கள் திரிக்க முடியும்?” என்று நான் கேட்டேன்…
சில மாதங்களுக்குப் பின் 2004 இல் குஜராத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் “வைப்ரன்ட் குஜராத்” என்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில் நடத்தினார் மோடி. அன்றைக்கு மோடியின் இமேஜ் பெரும் அடி வாங்கியிருந்தது…
பொதுவாகவே, தொழிலதிபர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் குஜராத்தில் நிலவிய போதிலும், குஜராத்துக்கு வருவதையே முதலாளிகள் அன்று விரும்பவில்லை. மோடியுடன் அவர்கள் ஒரே மேடையில் தோன்றுவது என்பதோ கற்பனைக்கு எட்டாததாக இருந்தது. அன்று மோடியின் கொள்கைகளை விமரிசித்தவர்களில் முக்கியமானவராக டாடா இருந்தார். அப்படியிருக்க, வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் ராடியாவுடன் டாடாவை பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை…

அன்றைக்கு பிற்பகலே ராடியா என்னை தொலைபேசியில் அழைத்தார்… மோடி விசயத்தில் கொஞ்சம் மென்மையாக அணுகுமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார். அவருடைய கோரிக்கைக்கு செவி மடுத்தால், உரிய சன்மானம் உண்டு என்பதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.
டாடாவை அகமதாபாத்துக்கு கொண்டு வருவது, டைம்ஸ் ஆப் இந்தியாவை வழிக்கு கொண்டுவருவது என்று இரண்டு இலக்குகளை ராடியாவுக்கு மோடி தந்திருக்கிறார் போலும்!” ..
அலைக்கற்றை ஊழலை ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்லை.
மோடி டாடாவுக்கு அளித்த பரிசுகள் என்ன?
  • நானோ ஆலைக்கு டாடா போட்ட முதலீடு ரூ. 2900 கோடி
இதற்கு மோடி அரசு வழங்கிய சலுகைகள்:
  • 9570 கோடி ரூபாய் மோடி அரசின் கடன். 20 ஆண்டு தவணையில் திருப்பித் தரவேண்டும். ஆண்டு வட்டி நூறு ரூபாய்க்கு பத்து பைசா.
  • 20 ஆண்டுகளுக்கு வாட் வரி கிடையாது. இவையன்றி சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி, மின்சார வரி சலுகைகள்; பத்து ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி தள்ளுபடி.
  • வழங்கப்பட்ட நிலம் மொத்தம் 1100 ஏக்கர். அகமதாபாத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள சனந்த் எனும் இடத்தில் உள்ள விவசயாப் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான நிலம் இது. இதன் சந்தை மதிப்பு சதுர மீட்டர் 10,000 ரூபாய். மோடி நிர்ணயித்த விலை ச.மீட்டர் 900 ரூபாய்.
  • இந்த நிலத்தை பதிவு செய்வதற்கான முத்திரைக் கட்டணம் 20 கோடியும் தள்ளுபடி.
  • ஆலைக்கு செல்வதற்கான நான்கு வழிச்சாலையை மோடி அரசே அமைத்துத் தரும்.
  • குடியிருப்புகளை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலத்தையும் மோடி அரசே வழங்கும்.
மோடி அரசே காரை உற்பத்தி செய்து, அதே மோடி அரசே சந்தையில் கூவி விற்று, லாபத்தை மட்டும் டாடாவுக்கு ஒப்படைப்பது என்ற புரட்சித்திட்டத்தை அடுத்த கட்டமாக மோடி அமல் படுத்தக் கூடும்.
மோடி ரசிகர்கள் அவரை NaMo (நமோ) என்று அழைப்பதை விட NaNo (நானோ) என்று செல்லமாக அழைப்பதே பொருத்தமாக இருக்கும்
vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக