புதன், 4 செப்டம்பர், 2013

மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..! MP, MLA க்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்ப்பு செல்லும்

 எம்.பி, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத்தியஅரசின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றவழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழப்பர் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுவை மத்தியஅரசு தாக்கல் செய்திருந்தது. மத்தியஅரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. மறுஆய்வு மனு மீதான உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக