செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சுப்ரமணியம் சுவாமி : காந்திஜி வழியைதான் பின்பற்றுகிறார் மோடி! இன்றைய JOKE

மும்பை:பா.ஜ.க., குஜராத் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் முறையை நடைமுறைப்படுத்தியது.இம் முறைக்கு பா.ஜ.க., தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.கட்டாயப்படுத்தவில்லை:இதில் தவறு என்ன இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள் விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சி பணிக்காக வழங்குகிறார்கள்.இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.மும்பையில் போட்டியிடுவாரா
சுவாமி:மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பையில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, இ       மும்பையில் போட்டியிடுவாரா சுவாமி:மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பையில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, இது குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும் நான் எடுக்க முடியாது என்றார்.மேலும் மும்பையில் இருந்து இரண்டு முறை தேர்ந்‌தெடுக்கப்பட்டு இருக்கிறேன் இது எனக்கு புகுந்த வீடு மாதிரி தான் என்றார். மேலும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் நமது ஓட்டு இரட்டிப்பாகும். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேவேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பம்’’ என்றார் சுவாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக