புதன், 25 செப்டம்பர், 2013

தமிழ்நாட்டில் குடும்ப கொலைகள் ! பாட்டி கொலை ! ஆனால் அந்த பாட்டி பேத்தியையும் மருமகனையும் கொலைசெய்தது கண்டு பிடிப்பு !

பாட்டி கொலையில் துப்பு துலக்கிய போது, மருமகன், பேத்தியை பாட்டியே கொலை செய்தது தெரிய வந்தது.
சேலம் மாவட்டம், வீராணம், காவல் நிலைய எல்லையில் உள்ளது மன்னார்பாளையம். இந்த ஊரைச்சேர்ந்த பச்சியம்மன் நகர் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி, வயது-70, விதவையான இவரது அண்ணன் பெயர் சுப்ரமணி,வயது-75. இருவரும்,  தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில், தனியாக வசித்து வந்தனர்.
கடந்த, 22-ம் தேதி காலையில், நாற்காலியில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்,  படுகாயங்களுடன் சரஸ்வதி பிணமாகி கிடந்தார். இன்னொரு நாற்காலியில் கயிறுகளால் கட்டப்பட்டிருந்த சுப்ரமணி, பலமான காயங்களுடன் உயிருக்கு போராடிகொண்டிருந்தார்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வீராணம் போலீஸார், சுப்ரமணியை மீட்டு சிகிச்சைக்காக,  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சரஸ்வதி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். கொலை நடந்த வீட்டை, 

.ஐ.ஜி., சஞ்சய்குமார், எஸ்.பி., சக்திவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதல் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர், சங்ககிரி டி.எஸ்.பி. ராமசாமி மற்றும் ஐந்து போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார், காயங்களுடன் உயிர் தப்பிய சுப்ரமணியிடம் நடத்திய விசார ணை யில், அவர், முன்னுக்குபின், முரணாக பேசியதையும், அவர் அடுத்தடுத்து தெரிவித்த தகவல் போலீஸா ருக்கு, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சுப்பிரமணியின், பக்கத்து நிலத்தை சேர்ந்த பாஸ்கரன், சுவர் ஏறி குதித்த,கொலையாளிகளை, தடுத்து நிறுத்தி  நேரடியாக பேசியதோடு அவர்கள் தப்பி சென்றதை கண்ணால் பார்த்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, தனிப்படை போலீஸார், தனித்தனியாக களமிறக்கப்பட்டு,கிடுக்கிபிடி விசாரணை நடத்தியதில், பல தகவல்கள் வெளியாகி உள்ளது. சுப்ரமணி, தன் மகன் சதாசிவத்துக்கும், தங்கை(இறந்து போன) சரஸ்வதியின் மகள் மல்லிகாவுக்கு திருமணம் செய்து வைத்தார்.
அவர்களுக்கு, மோகன்குமார், வயது-23, என்ற மகனும், கவுதமி, வயது-20, என்கிற மகளும் உள்ளனர். அனைவரும், நாமக்கலம் மாவட்டம், எலச்சிப்பாளையத்தில்,வசித்து வந்தனர். மருமகன் சதாசி வம், மக்காச்சோளத்தை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இதில், அவருக்கு, லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதோடு, வங்கியில் பெற்ற, 18 லட்ச ரூபாய் கடனும் திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டவர்,நிலைமையை சமாளிக்க, சீலநாயக்கன்பட்டியில் குடியேறி உள்ளா
சதாசிவம் வாங்கிய கடனை அடைக்க, பணம் கேட்டு, தந்தை சுப்ரமணியத்தை,அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுத்ததால், சுப்ரமணி, அவரது தங்கை சரஸ்வதி ஆகியோரை,  அடிக் கடி,  அடித்து, உதைத்து, கொலை செய்வதாக மிரட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இருவரையும், கொலை செய்யும் முடிவுக்கு, சதாசிவம் வந்துள்ளார். சுதாரித்து கொண்ட சுப்ரமணி, திட்டமிட்டு, சதாசிவம், கதையை முடிக்க நினைத்தார். இதற்கு, சதாசிவத்தின் மனைவி மல்லிகா, மகன் மோகன்குமார், சரஸ்வதி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
சேலத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் மூலம், கூலிப்படை தயார் செய்யப்பட்டது. கடந்த, 2009, நவ.,12-ல், கூலிப்படையினர், வீட்டில் தனியாக இருந்த சதாசிவத்தை, வயது-45, கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தந்தை கொலை செய்யப்பட்டதை நேரில், பார்த்துவிட்ட மகள் கவுதமியையும்  கூலிப்படையினரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.
பிறகு, இருவரும், தூக்கில் தொங்கி  தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்னதானப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தந்தை -மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்து விட்டனர்.
இந்நிலையில், கூலிப்படையை ஏவிய சண்முகத்திற்கும், மற்ற ரவுடிகளுடன்,ஏற்பட்ட மோத லில், கடந்த 2010, ஜூலை., 25-ல், எட்டு பேர் கொண்ட கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு, சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சண்முகம் கொலை செய்யப்பட்ட பின், அவரது சகோதரர் ராஜா,அடிக்கடி மிரட்டி, சுப்ரமணியிடம் பணம் பறித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், சுப்ரமணி, பணம் தர மறுத்ததால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து கடந்த ஒருவாரமாக வீட்டுக்கு வந்த ராஜா,சுப்ரமணியத்தை மிரட்டி செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.
சம்பவ நாளான, 22-ம் தேதி, ராஜா, தன் கூட்டாளிகள் இருவருடன்  சுப்ரமணி வீட்டுக்கு சென்றுள்ளார். வழக்க ம் போல, பணம் கேட்டு, தகராறு செய்துள்ளார். சுப்பிரமணி பணம் தரமறுத் ததால்  இருவருக் குள்ளும் தகராறு நடந்துள்ளது.
வயதான சுப்ரமணி, அவரது தங்கை சரஸ்வதி ஆகியோரை, தனித்தனி நாற்காலியில் கட்டிப்போட்ட ராஜாவும் அவனது கூட்டாளிகளும்,  வீட்டிலிருந்தபணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
அப்போது, கூச்சல் போட முயன்ற இருவரையும், தாக்கியதில், எதிர்பாராத விதமாக சரஸ்வதி இறந்து விட்டார். பின்னர், மயங்கிய நிலையிலிருந்த சுப்பிரமணியத்தை அப்டியே விஒட்டு விட்டு, அவரது வீட்டு பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகையை எடுத்து கொண்டு, ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் தப்பியோடி உள்ளனர்.
இந்த உண்மையை வெளியே சொன்னால், மகன் சதாசிவம், பேத்தி கவுதமி,கொலை செய்யப்பட்ட சம்பவம் வெட்டவெளிச்சமாகி விடும் என்பதால்,உண்மையை கூறாமல், சுப்ரமணி, தொடர்ந்து உண்மையை மறைத்து வந்துள்ளார். ஆனாலும், போலிசார் விசாரனையில் உண்மை தெரிந்துவிட்டது. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக