வெள்ளி, 20 செப்டம்பர், 2013

பொது கழிப்பிடங்களை ஆக்கிரமித்து கட்டணம் வசூலிக்கும் கட்சி தொண்டர்கள்

கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 903 நவீன கழிப்பிடங்கள் உள்ளன.மெரினா கடற்கரை, பிராட்வே, தியாகராயநகர் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் இயற்கை உபாதையை கழிக்க இந்த கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது.ஒரு காலத்தில் கழிவறைகள் டெண்டர் விடப்பட்டது. அதன் பிறகு இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டது.ஆனாலும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கழிவறைகளை தனியார் ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்து வருகிறார்கள். மாதம் தோறும் லட்சக்கணக்கில் தனி நபர் பணத்தை சுருட்டி வருகிறார்கள் மக்கள் அதிக அளவு பயன்படுத்தாத ஒதுக்குப்புறமாக இருக்கும் கழிவறைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. அவை உடைந்து, நொறுங்கி மக்கள் அவசரத்துக்கு உள்ளே செல்ல முடியாதபடி அலங் கோலமாக உள்ளன.கட்டணம் வசூலிப்பவர்களிடம் கேட்டால் நாங்கள் பராமரிப்பதற்காகத்தான் கட்டணம் வசூலிக்கிறோம் என்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு கழிப்பறையையும் பராமரிக்க பிளிச்சீங் பவுடர், மோட்டார் வசதி, கட்டிட சீரமைப்பு போன்றவற்றை மாநகராட்சியே செய்து வருகிறது.
தூய்மைபடுத்த தனியாக துப்புரவு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுத்தம் செய்வார்கள். மோட்டார் பழுதானால் கண்டு கொள்வதில்லை எனவே தனியார் இந்த கழிப்பிடங்களை கைப்பற்றி கட்டணம் வசூலிக்கிறார்கள். சுத்தம் செய்வதையும் அவர்களே பார்த்து கொள்கிறார்கள் என்றார்கள்.யாரோ ஒரு சில தனியார் மட்டும் அடிக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்தி மாநகராட்சியே இந்த கழிப்பிடங் களை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.இதுபற்றி மாநகராட்சியில் விசாரித்த போது, கட்டணம் வசூலிப்பது யார்? என்பது எங்களுக்கு தெரிய வில்லை. எந்த கழிப்பிடத்திலும் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை. கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக