சனி, 7 செப்டம்பர், 2013

கேரள கோயில்களில் தங்கம் இருப்பு எவ்வளவு? ரூபாய் வீழ்ச்சியை மேலும் தடுக்க மத்திய அரசு முக்கிய முடிவு ?

திருவனந்தபுரம் : கேரள கோயில்களில் உள்ள தங்கம் குறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம் குறித்த கணக்குகளை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் உள்ள கோயில்களில் வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விவரங்களை சேகரிக்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து தேவசம் போர்டுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளா வில் முக்கியமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு, குருவாயூர், மலபார் தேவசம் போர்டு உள்ளிட்ட 5 அமைப்புகள் உள்ளன. இந்த 5 தேவசம் போர்டுகளின் கீழ்தான் முக்கியமான கோயில்கள் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப் பாட்டிலும், குருவாயூர் கிருஷ்ணன் கோயில் குருவாயூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள கடிதம் குறித்து குருவாயூர் கோயில் நிர்வாக அதிகாரி முரளிதரன் கூறுகையில், ‘‘குருவாயூர் கோயி லில் உள்ள நகைகள் குறித்த விவரங்களை தருமாறு ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக விரைவில் தேவசம் போர்டு ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி தீர்மானிக்க உள்ளோம்’’ என்றார்.

திருவனந்தபும் பத்மநாபசுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகளில் கணக்கிட முடியாத பொக்கிஷங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் 5 அறைகளில் பொக்கிஷங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்து விட்டது. இதில் பல லட்சம்  கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. இந்த பொக்கிஷம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த கோயிலில் உள்ள பொக்கிஷம் குறித்த தகவல்களை பெறவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறதுdinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக