செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பலாத்காரத்திற்கு முன் ‘ஆபாச படம்’ பார்க்க நிர்பந்திக்கப்பட்ட பெண் நிருபர்!

மும்பையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர், பலாத்காரத்திற்கு முன்னதாக, குற்றவாளிகளில் ஒருவனால் வலுக்கட்டாயமாக ஆபாசப்படம் பார்க்க வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் மும்பை சக்தி மில்லை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற இரு பத்திரிக்கையாளர்களில், ஆண் பத்திரிக்கையாளரை கட்டி போட்டு விட்டு, பெண் பத்திரிக்கையாளரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கற்பழித்தது. பலாத்காரத்திற்கு முன் ‘ஆபாச படம்’ பார்க்க நிர்பந்திக்கப்பட்ட பெண் நிருபர்! பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், அப்பெண்ணை ஆபாசமாக வீடியோவும் எடுத்து, அதனைக் காட்டி அப்பெண்ணை எச்சரித்துள்ளனர் கயவர்கள். ஆனால், ஒருவழியாக மருத்துவமனை வந்து சேர்ந்த பாதிக்கப்பட்ட அப்பெண், பலாத்காரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்னால் தன்னை குற்றவாளிகளில் ஒருவர் ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி அவரை வற்புறுத்தியதாக போலீசில் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர். விரைவில் அடையாள அணிவகுப்பு ஆபாச புகைப்படம் பார்க்கச் சொல்லி வற்புறுத்திய குற்றவாளி அடையாளம் காணப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் பத்திரிக்கையாளரை குற்றவாளிகளில் ஒருவர் ஆபாசமாக படமெடுத்த செல்போன் தற்போது யார் கையில் உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளது குறிப்பிடத்தக tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக