திங்கள், 2 செப்டம்பர், 2013

காதல் கணவன் கொடுமை ! குழந்தை மீதும் தன்மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

நாகர்கோவில் அருகே குழந்தை மீது மண்எண்ணை ஊற்றி தாய் தற்கொலை
முயற்சி" />சில ஆண்டுகளுக்கு முன்பு ரமாவுக்கும் வினோத் குமாருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் ரமா– வினோத் குமாருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்த தம்பதிக்கு 1 1/2 வயதில் வருண்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி மகளிர் போலீசில் ரமா புகார் செய்தார். புகாரில் வரதட்சணை கேட்டு கணவர் வினோத்குமார் கொடுமை படுத்துவதாக கூறி இருந்தார். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி னார்கள்.
இந்த நிலையில் ரமா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது உறவினர்கள் அவரை சமரசம் செய்து கணவர் வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு அனுப்பி வைத்தனர். அங்கு சில நாட்களில் மீண்டும் கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதனை உறவினர்கள் சமரசம் செய்து வைத்தனர். அதன் பிறகு நேற்று காலையும் அவர்களுக்கு இடையே தகராறு மூண்டது. இதை அறிந்து அங்கு வந்த அவர்களின் உறவினர்கள் வினோத்குமார்– ரமாவை சமரசம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று ரமா வீட்டிற்குள் சென்று அங்கிருந்த குழந்தை வருண்குமார் மீது மண் எண்ணையை ஊற்றினார். மேலும் தன் மீதும் மண்எண்ணை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினோத் குமாரும் உறவினர்களும் வீட்டுக்குள் பாய்ந்து சென்று ரமாவை தடுத்தனர். அதன்பிறகு வினோத்குமார் குழந்தை வருண்குமார் மீது தண்ணீர் ஊற்றி மண்எண்ணையை அகற்றினார்.
பிறகு குழந்தையுடன் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு சென்று இதுபற்றி கூறினார். அதற்குள் ரமாவுடன் அவரது பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசாரிடம் ரமா கூறும் போது, திருமணம் ஆனது முதல் தன்னை வரதட்சணை கேட்டு கணவர் வினோத் குமார் கொடுமை படுத்திய தாகவும், இதுபற்றி போலீசில் ஏற்கனவே புகார் செய்து உள்ளதாகவும் கூறினார்.
மேலும் பெற்றோர் சமரசம் செய்ததால் கணவருடன் வாழ சென்றதாகவும் அதன் பிறகும் தன்னை கணவர் கொடுமை படுத்தியதாகவும் வழக்கை வாபஸ் வாங்கும்படி மிரட்டியதாகவும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கூறினார்.
இதுபற்றி இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி இரு தரப்பினரிட மும் விசாரணை நடத்தினார்.
கணவன் வீட்டுக்கு செல்ல ரமா மறுத்ததால் இனி கணவன்– மனைவி இருவரும் மீண்டும் பிரச்சினை களை உருவாக்கக்கூடாது என்று இருவரிடமும் போலீசார் எழுதி வாங்கினார். அதன் பிறகு ரமாவை அவரது தாயாருடன் பெற்றோர் வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனmaalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக