வெள்ளி, 27 செப்டம்பர், 2013

சினிமாக்காரர்களை கேவலப்படுத்திய ஜெயலலிதாவுக்கு சாமரம் வீசிய சினிமா வியாபாரிகள்

விழாவுக்கு வந்த பிரபலங்களைவிட, வராத பிரபலங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. பாலுமகேந்திரா, பாரதிராஜா, கவுண்டமணி, செந்தில், எம்.எஸ்.விஸ்வநாதன், வடிவேலு, எஸ்.பி.பி , ஷங்கர், மணிரத்னம், பி.சுசீலா, எஸ்.ஜானகி என தமிழ் சினிமாவுக்குப் பெரும்பங்காற்றிய பெரும்பாலானவர்கள் வரவில்லை. சரித்திரத்தில் எழுதிக் கொண்டாடி இருக்க வேண்டிய 'சினிமா-100’ விழா அ.தி.மு.க. கட்சி விழா போல நடந்து முடிந்திருக்கிறது. இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா! சினிமா விழாவுக்கு கருணாநிதிக்கு அழைப்பு இல்லை என்ற சர்ச்சைகள் அதிகமானதால் விழா தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன் கருணாநிதிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. என்னய்யா இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா? என்று அழைப்பிதழ் கொடுத்த எடிட்டர் மோகனிடமும், தென்இந்திய திரைப்பட வர்த்தக சபை துணைத் தலைவர் தேவராஜிடமும் கேட்டாராம். அவர்கள் இருவரும் பதில் சொல்லாமல் அமைதியாகத் திரும்பி இருக்கிறார்கள். சினிமா விழா காரணமாக சென்னைத் திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்கள் அத்தனையையும் முதல்வர்தான் தேர்வு செய்தாராம்.
பருத்தி வீரன், அரவான் போன்றவைகூட முக்கிய திரைப்படங்கள் வரிசையில் திரையிடப்பட தமிழ் சினிமாவில் வசனப் புரட்சியை ஏற்படுத்திய பராசக்தி, மந்திரி குமாரி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட படங்கள் எதுவுமே அந்த வரிசையில் இடம் பிடிக்கவில்லை
. நான் யாரு தெரியும் இல்ல
தமிழக அரசு சார்பாக 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததை வைத்து, நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை அப்படியே ஜெயா தொலைக்காட்சிக்குப் போனது.
இதனால் மற்ற சேனல்களுக்கு விழாவில் அனுமதி இல்லை. கடைசிநேரம் வரை பத்திரிகையாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
அழைப்பிதழும், அனுமதிச் சீட்டும் இல்லாமலேயே பலரும் அரங்கில் நுழைந்தனர். நான் யாரு தெரியும் இல்ல. அ.தி.மு.க-காரன்கிட்டயே ஐ.டி. கார்டு கேட்குறியா என்று செக்யூரிட்டிகளை மிரட்டியே அ.தி.மு.க-வினர் பலரும் உள்ளே புகுந்தனர்.
வரவேற்புரை முதல் நன்றியுரை சொன்னவர்கள் வரை, அனைவருமே ஜெயலலிதா புகழ் பாடினர். போதாக்குறைக்கு கலைநிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா புகழ் பாடப்பட்டது.
அம்மா புகழ் பாடுவதில், அ.தி.மு.க. அமைச்சர்களையே சினிமா துறையினர் மிஞ்சிவிட்டனர்.
ஒரு ரூபாய் இட்லியில் இருந்து 10 ரூபாய் வாட்டர் பாட்டில் வரை ஆளாளுக்குப் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
சிறப்புரையாற்றிய ஜெயலலிதா, கருணாநியைத் தாக்கி குட்டிக்கதை சொன்னார். இயக்குனர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை சாதனை படைத்தவர்களின் பெயர்களையும் வாசித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமா சுதந்திரமாகச் செயல்படுகிறது என்றும் பெருமிதப்பட்டார்.
கடைசியாய் ரஜினி!
நூறாண்டு சினிமாவுக்குப் பங்காற்றியவர்கள் என 59 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களாக இருந்ததால், மேடைக்கு வரவே ரொம்பவும் சிரமப் பட்டனர்.
சரோஜா தேவி, மனோரமா, எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, சௌகார் ஜானகி என தன்னுடைய காலகட்டத்தில் நடித்த எல்லா நடிகைகளுக்கும் விருது வழங்கினார் ஜெயலலிதா.
அத்துடன், மீனா, சிம்ரன், த்ரிஷாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ரஜினியும், கமலும் விருது வாங்கியவர்களில் அடக்கம்.
விழா மேடையில் கடைசி வரிசையில் கடைசியாக அமர்ந்திருந்தார் ரஜினி. 30 பேருக்கு கொடுத்தபிறகுதான் ரஜினி அழைக்கப்பட்டார்.

பெயர் அறிவிக்கப்பட்டதும் வேகமாக வந்தார். விருதை வாங்கியதும் உடனடியாக கிளம்பிவிட்டார். ஜெயலலிதாவும் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.
கமல் விருது வாங்க வரும்போது ஜெயலலிதா முகத்தில் சின்ன சிரிப்புக்கூட இல்லை. கமலும் ஏதோ கஷ்டப்பட்டு சிரிப்பதைப் போல சிரித்துவிட்டு விருதை வாங்கிச் சென்றார். ரஜினியும், கமலும் பேசும்போது அரங்கத்தில் ஜெயலலிதா இல்லை.
ஒதுக்கப்பட்ட விஜய்!
அழைப்பே இல்லை என்று சொல்லப்பட்ட விஜய் வந்ததுதான் விழாவின் ஹைலைட். விஜய் பேசும்போது, கலைத் துறையில் பணியாற்றி முதல்வராக உயர்ந்து சினிமாவுக்கு எவ்வளவோ செய்துகொடுத்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி.
ஒரு நடிகை நாட்டை ஆளும் பெருமை தமிழகத்துக்கு மட்டும்தான் உண்டு! என்று பெருமிதப்பட்டார்.
அவர் ஜெயலலிதாவை புகழ்கிறாரா அல்லது வஞ்சப் புகழ்ச்சியாக சொல்கிறாரா என்று பார்வையாளர்கள் குழம்பினர். அவருக்கு விருது தரப்பட்டவில்லை.

பிலிம் சேம்பர் உருவாக்கியிருந்த காணொளியில், கருணாநிதியின் புகைப்படமும், பெயரும் சில நொடிகள் வந்து போனது. அதேபோல, கலைப்புலி எஸ்.தாணுவுக்காக விஜய் நடித்த துப்பாக்கி படம் மட்டும் ஓரிரு நொடிகளுக்கு காட்டப்பட்டது.
ஆனால், விஜயகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்களில் சில காட்சிகளைக் காண்பித்தார்களே தவிர, அவரின் முகத்தை தப்பித் தவறியும் காட்டவில்லை.
அதுவும் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்காக புலன் விசாரணையும், கேப்டன் பிரபாகரனும் பட்டியலில் இடம்பிடித்தன.
ஸ்ரீதேவியை மறந்த சினிமா!
விழாவுக்கு வந்த பிரபலங்களைவிட, வராத பிரபலங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. பாலுமகேந்திரா, பாரதிராஜா, கவுண்டமணி, செந்தில், எம்.எஸ்.விஸ்வநாதன், வடிவேலு, எஸ்.பி.பி , ஷங்கர், மணிரத்னம், பி.சுசீலா, எஸ்.ஜானகி என தமிழ் சினிமாவுக்குப் பெரும்பங்காற்றிய பெரும்பாலானவர்கள் வரவில்லை.
இவர்களில் பலர் விழாவுக்கு அழைக்கப்படவே இல்லையாம். பாலுமகேந்திரா மட்டும் மறுநாள் நடைபெற்ற தெலுங்கு சினிமாவின் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஸ்ரீதேவி வந்திருந்தார். ஆனால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை. இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் விருதுப் பட்டியலில் இல்லை. காரணம் செம்மொழி பாடலுக்கு இசையமைத்ததுதான் என்கிறார்கள்.
தனக்குப் பிடித்த சினிமாக்காரர்களை மட்டும் கௌரவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்​திருந்தால், அதற்கு தனியாக ஒரு விழா நடத்தி இருக்கலாம்.
சினிமா 100 என்ற பொதுவான விழாவை இப்படி ஜால்ரா விழாவாக மாற்றிவிட்டார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள் சினிமா பிரபலங்கள்.
திட்டமிட்ட புறக்கணிப்பு!
சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டனர் என்று திரைப்படக் கல்லூரி மாணவர்கள் குமுறுகிறார்கள்.
சினிமா விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், எங்களை அலட்சியப்படுத்திவிட்டனர்.
நேற்று வந்தவர்களை எல்லாம் மேடையில் கௌர விக்கும்போது, எங்கள் கல்லூரியில் படித்து கேமராவால் இந்திய அளவில் பேசப்பட்ட பி.சி.ஸ்ரீராம் போன்றவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. எங்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக