வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நடிகை ஸ்ரீதேவியின் கணவருக்கு கொலை மிரட்டல் ! போனி கபூருக்கு போனில் அச்சுறுத்தல்


நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றிய செய்திகளும் இணையதளத்தில் பரவி வருகிறது. போனி கபூரை போனில் தொடர்பு கொண்டு சுட்டு கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். "எங்களது கைதுக்கு காரணமான உங்களை தற்போது பழிக்கு பழி தீர்க்க உள்ளோம்" என்றும் கூறி உள்ளனர். இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக அவருக்கு போன் மூலமும், மெசேஜ் மூலமும் மிரட்டல் விடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு நிர்ப்பந்தமும் விதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதுபற்றி போனி கபூர் மும்பை ஒசிவாரா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.போனி கபூருக்கு மும்பை அந்தேரி மேக்னம் சொசைட்டி வளாகத்தில் பங்களா உள்ளது. அந்த பங்களாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். கைதான அந்த ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக