புதன், 4 செப்டம்பர், 2013

பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு ! ம்ம்ம் இன்னும் எத்தனை இழுதடிப்புக்களோ

பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு: பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பவானிசிங் நீக்கியது பற்றிய ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக அரசு காலஅவகாசம் கேட்டதையடுத்து வழக்கின் விசாரணை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் கர்நாடக கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்து. இந்தநிலையில், பவானிசிங்கை இந்த வழக்கில் இருந்து திரும்பப் பெற்றது அரசு. அரசு வழக்கறிஞர் திரும்பப் பெற்றதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக