ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மில்லில் அடைத்து வைத்து மாணவி கற்பழிப்பு : உறவினர்கள் சாலை மறியல்-


  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்காளம்மன் கோவில்  ரம்பா (பெயர் மாற்றம் )(19) முத்துப்பேட்டையில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதே பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சுகுமார் (வயது 22). இவர் தம்பிக்கோட்டை பகுதியில் உள்ள கல்லூhயில் பட்டப் படிப்பு படித்து வந்தார். 2011-ம் ஆண்டு முதல் இவர்களுக்கு இடையே பழக்கம் இருந்து வந்தது. இந்த பழக்கம் காதலாக மாறியது இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இது அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு அந்த மாணவி யை அதிராம்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துதிருந்தனர். புன்னர் ஓராண்டுக்கு பின்னார் தந்தை மீண்டும் தனது மகளை ஊருக்கு அழைத்து வந்து பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்க வைத்தார். இந்நிலையில் பட்டப்படிப்பு முடித்து விட்டு வெளி நாட்டு வேலைக்காக காத்திருந்த சுகுமார் மீண்டும் அந்த மாணவியுடன் சுற்ற அரம்பித்தான். இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். கடந்த 10 நாட்களாக தேர்வு நடைப்பெற்று வருவதால் அந்த மாணவி தினமும் காலை பள்ளிக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். இதே போல் சம்பவத்தன்று மாணவி காலை தேர்வு எழுதுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சுகுமார் தாமரைக் குளம் பகுதியில் உள்ள அரிசி மில்லில் அழைத்து சென்று தான் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் அதற்குள் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்; என கூறி அவரை பாலியல் பாலத்காரம் செய்து உள்ளார் என்று  கூறப்படுகிறது. அரிசி மில்லுக்குள் பலாத்காரம் செய்ய சுகுமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் சுரேந்திரன் மில்லுக்கு வெளியிலேயே பாதுகாப்பாக அமர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த மில்லுக்குள் ஒரு வாலிபரும், இளம் பெண்ணும் சென்றதை அறிந்த அப்பகுதி மக்கள் அரிசி மில்லின் முன்பு வந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த சுகுமாரையும் அவருடன் இருந்த அந்த மாணவியையும் அவர்கள் பிடித்தனர்.
பின்னர் இருவது வரையும் கண்டித்து அவரவர் வீட்டுற்கு அனுப்பி வைத்தனர். ஊருக்கு தெரிந்து விட்டதாலும் தனக்கு நெர்ந்;த கொடுமையையும் தனது பெற்றோரிடம் கூறி அந்த மாணவி அழுதார்;. புpன்னர் மாணவியின் தந்தை சுகுமாரிடம் அது குறித்து விசாரித்த போது தான் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், நான் பொழுது போக்காக தான் மாணவியிடம் பழகினேன் என்றும் அலட்சியமாக கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த விவசாயி தனது மகளுடன் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் மனு கொடுத்தார். அந்த நிலையில் சுகுமாரை போலீஸார் தேடி வந்தனர்.


இந்த நிலையில் கற்பழித்த வலிபரை உடனடியாக கைது செய்ய கோரி ரம்மியாவின் உறவினர்கள் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இ.கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன் நகர செயலாளர் மார்க்ஸ் வி.சி. ஒன்றிய செயலாளர் மீணாட்சி சுந்தரம் மா.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமத்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட நிருவாகி செல் வழகன் ஒன்றிய நிர்வாகி கார்த்திக் கவுன்சிலர் கிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டி.எஸ்.பி பாஸ்கர் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆர்.ஐ ராமசந்திரன்  வி.ஏ.ஓ கிருஷ்ண குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் கைது செய்யப்படும் என்று உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். மறியலால் பட்டுக்கோட்டை- திருத்துப்பூண்டி –மன்னார்குடி வழத்தடத்தில் போக்கு வரத்து தடைப்பட்டது இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்ப்பட்டது.

    - செம்பருத்திnakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக