சனி, 28 செப்டம்பர், 2013

ராகுல்: முட்டாள் தனமானது ! பிரதமரை ராகுல் விமர்சனம் ! எதிர்கட்சிகள் கூட இப்படி பிரதமரை அவமான படுத்தியதில்லை

அவசர சட்டம் குறித்து ராகுல் விமர்சனம்: பிரதமர் பதவி விலக பா.ஜனதா வலியுறுத்தல்" குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக இந்த சட்டம் காத்திருக்கு நிலையில், இந்த சட்டம் முட்டாள்தனமானது என்றும், உடனே கிழித்து எறிய வேண்டும் என்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக விமர்சனம் செய்தார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவை முடிவினை எதிர்த்து ராகுல் காந்தி இவ்வாறு கூறியது, பிரதமரை அவமானப்படுத்தும் செயலாகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமரின் முடிவு முட்டாள்தனம் என்று ராகுல் காந்தி தைரியமாக கூறியிருக்கிறார். இவ்வாறு ராகுல் விமர்சித்தது படு மோசமானது. எதிர்க்கட்சிகள் கூட இப்படி விமர்சித்தது இல்லை.
ராகுலின் இந்த விமர்சனத்திற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். ராகுல் விமர்சனம் குறித்து பிரதமரின் நிலையை நாங்கள் அறிய விரும்புகிறோம். மனசாட்சி இருந்தால் பிரதமர் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய சட்ட மந்திரி கமல்நாத், “பிரதமர் நாடு திரும்பியதும், அவசர சட்டம் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பிரதமரின் ராஜினாமாவைக் கோருவதைத் தவிர பா.ஜனதாவுக்கு வேறு வேலையில்லை” என்று சாடினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக