ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

ரூபாய் மதிப்பை சீரமைக்க கோயில் தங்கங்கள் பயன்படுத்த அரசு ஆலோசனை !

புதுடில்லி, செப்.1- ரூபாய் மதிப்பு சரிவை சரிக்கட்டுவதற்காக, கோவில்களில் குவிந்து கிடக்கும் தங்கத்தை பயன் படுத்த மத்திய அரசு திட் டமிட்டு வருவதாக தக வல் வெளியாகி உள்ளது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 25 சதவீதம் குறைந்து தற்போது ஒரு டாலரின் மதிப்பு ரூ.65.70 ஆக உள்ளது.> நெருக்கடியான இந்த கால கட்டத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிக் கட்டுவதற்காக, நமது நாட்டில் உள்ள கோவில் களில் குவிந்து கிடக் கும் ஏராளமான தங்க நகைகளை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.> தங்கம் இறக்குமதியை தவிர்ப்பதற்காக, இந்திய கோவில்களில் உள்ள தங்க நகைகளை ரிசர்வ் வங்கிக்கு விற்கச்செய்து, அந்த நகைகளை தங்கக் கட்டிகளாக உருக்கி இருப்பில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள் ளது. இதற்காக, முக்கிய கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, தங்க நகை கள் அதிகமாக உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், மும்பை சித்தி விநாயகர் கோவில், திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் போன்ற கோவில்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. திருப்பதி கோவிலில்1000 டன் நகைகள்

தமிழ்நாட்டில் சிதம் பரத்தில் உள்ள நடராஜர் கோவில் மற்றும் திருப் பதி ஏழுமலையான் கோவில்களின் கூரைக ளும் தங்கத்தினால் வேயப் பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. அடையா ளம் காணப்பட்டுள்ள கோவில்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி நிர்வாகிகளை ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் அணுகி, தொடர்புடைய கோவில்களுடன் தொடர்பு கொண்டு தங்க நகை களை முதலீடு செய்யும் படி வற்புறுத்தி வருவ தாகவும் தெரிய வந்துள் ளது.
உலகிலேயே மிகவும் பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டும் ஏறத்தாழ 1000 டன் தங்க நகைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் இந்த ஆண்டு இறக்குமதி யாக இருக்கும் தங்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப் பிடத்தக்கது. நாடு முழு வதும் உள்ள கோவில் களில் 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டன் தங்கம் வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், மத்திய அரசின் இந்த முயற்சிக்கு கோவில் நிர்வாகத்தினர் சம்மதம் தெரிவிப்பார்களா? என்று தெரியவில்லை. இது குறித்து திருப்பதி கோவில் தேவஸ்தான செய்தித் தொடர்பாளரி டம் கேட்டபோது இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தங்களை கலந்து பேச வில்லை என்று  தெரிவித் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக