வியாழன், 19 செப்டம்பர், 2013

சினிமா நூற்றாண்டு விழா: கலைஞரை மறந்துவிட்டு திரைக்கு விழா எடுக்கும் கூத்தாடிகள்

கலைஞருக்கு அழைப்பில்லாத சினிமா நூற்றாண்டு விழா ,தமிழ் திரையுலகத்திற்கு கலைஞர் ஆட்சியில் செய்த உதவிகள் சலுகைகள் போன்று வேறு எவருமே செய்யவில்லை , இதை யாருமே மறுக்க மாட்டார்கள். சரி அதுதான் போகட்டும் , தனது இருபதாவது வயதில் ராஜகுமாரிக்கு வசனம் எழுத தொடங்கி தமிழ்நாட்டை தனது புரட்சிகர வசனங்களால் புரட்டி போட்ட ஒரு உன்னத கலைஞர் யார் ?  நாதா சுவாமி பிரபோ  அடியேன் பாக்கியம் போன்று வெறும் புராண பிற்போக்கு குப்பைகளில் இருந்து தமிழ் திரையை மீட்டத்தில் கலைஞரின் பங்கு எவ்வளவு என்பது வரலாறு சொல்லி கொண்டிருக்கிறதே ? பராசக்தி அன்று முட்டிய நெருப்பு இன்றுவரை கொழுந்து விட்டு எரிகிறதே? தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் திரை உலகிற்கும் கலைஞர் கருணாநிதிதான் பிதாமகர் , கலைஞரை மறந்து விட்டு கலைவிழாவா ? ஜெயலலிதா மீது அவ்வளவு பயமா அல்லது அவரது சலுகைகளுக்கு சோரம் போய்விட்டீர்களா ? இதுதான் அன்றே தந்தை பெரியார் சொன்னார் சினிமாக்காரன் அயோக்கியன்
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்காக சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. தியேட்டர்களில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பூங்காக்கள் தினமும் இலவச படங்கள் திரையிடப்படுவதால் களைகட்டி உள்ளன. வண்ண வண்ண போஸ்டர்கள் நகரமெங்கும் அலங்கரிக்கிறது. கட்-அவுட் பேனர்களும் வைக்கப்படுகின்றன. நாளை மறுநாள் (21–ந்தேதி) மாலை 5.30 மணிக்கு விழா துவங்குகிறது. முதல் அமைச்சர் ஜெயலலிதா இதில் பங்கேற்று துவக்கி வைக்கிறார்.
அப்போது தமிழ் நடிகர், நடிகைகள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள். முன்னணி நடிகர், நடிகைகள் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
22–ந்தேதி காலை கன்னட நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23–ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
24–ந்தேதி நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்–மந்திரி கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா, கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சிவி, நாகார்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கின்றனர்.
சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி சத்யம், அபிராமி, உட்லண்ட், 4 பிரேம்ஸ் தியேட்டர்களில் பழைய படங்கள் இலவசமாக திரையிடப்பட்டு சினிமா படப்பிடிப்புகளும் 24–ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 4 மாநில நடிகர், நடிகைகளும் சென்னையில் குவிகிறார்கள். தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையினர் அரசுடன் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக