ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நாத்திகர் விழா பேரணி நடத்தலாம்

சென்னை: திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் பி.ஜான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் திராவிடர் விடுதலை  கழகம் சார்பில் சென்னையில் நாத்திகர் விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து செப்டம்பர் 1ம் தேதி ஐஸ்ஹவுஸ் அன்னிபெசன்ட் சாலையிலிருந்து  நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம் வழியாக வி.எம்.சாலை வரை பேரணி, விஎம் சாலை அருகில் தீமிதி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு  கொடுத்தோம்.போலீசார் மறுத்துவிட்டனர். பேரணிக்கு அனுமதிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தனபாலன், துரைச்சாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பு வக்கீல் பிரசாத் ஆஜராகி, ஏற்கனவே, 2007, 2009, 2011ல்  இதுபோன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த போலீசார் இப்போது மறுக்கின்றனர் என்றார்.
அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, பேரணி நடத்த அனுமதி கோரும் சாலைகளில் இந்துக்கோயில்களும், மசூதிகளும், கிறிஸ்தவ ஆலயங்களும்  உள்ளன. மத உணர்வு புண்படும் வகையில் கோஷம் எழுப்பப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும், அவர்கள் கோரும் சாலைகள்  குறுகியவை. போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து லாங்கஸ் கார்டன் சந்திப்பு வரை பேரணி நடத்தலாம்.  தொண்டர்கள் பிரச்னை செய்யாமல் மனுதாரர் உத்தரவாதம் தரவேண்டும். மத உணர்வுக்கு எதிராக எந்த கோஷமும் எழுப்பக்கூடாது. ஏதாவது அசம்பாவிதம்  ஏற்பட்டால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தன dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக