வியாழன், 5 செப்டம்பர், 2013

கற்பழிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு குற்றவாளியின் 8 வயது மகனை மணமுடிக்க பஞ்சாயத்து தீர்ப்பு ! 21 நூற்றாண்டை நோக்கி ?

ராஜஸ்தான் மாநில ஜெய்பூர் நகருக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள கோடா நகரில் கேசவ்புரா பகுதியில் பஞ்சாயத்து ஒன்றில் விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.  கைலாஷ் என்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் 6 வயது சிறுமி ஒருவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓர் அறையில் அடைத்து வைத்து கற்பழித்தார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்வதற்கு பதிலாக பஞ்சாயத்தார் முன்னிலையில் விவகாரத்தை கொண்டு சென்றனர்.  பஞ்சாயத்தினர் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமியை கைலாஷின் 8 வயது மகனுக்கு திருமணம் செய்து வைக்கும்படி தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பினை சிறுமியின் பெற்றோர் மற்றும் கைலாஷ் ஏற்க மறுத்தனர்.  சிறுமியின் பெற்றோர் மற்றும் குற்றவாளிக்கு இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கைலாஷ் நேற்று மீண்டும் சிறுமியை கற்பழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலாளர்கள் சிலர், சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரை மகாவீர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் ஒன்றை பதிவு செய்தனர்.
இதனை அடுத்து கைலாஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸ் அதிகாரி பன்வாரி லால் மீனா தெரிவித்துள்ளார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக