செவ்வாய், 3 செப்டம்பர், 2013

5 கற்பழிப்புகள் ! ஒரே நாளில் டெல்லியின் சாதனை ? பாலியல் வன்முறையில் டெல்லி முதலிடத்தை பெற்று விட்டது ! ரொம்ப பெருமை படவேண்டிய விஷயம் ???

டெல்லியில் ஒரே நாளில் 4 சிறுமிகள் உள்பட 5 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். டெல்லி வெல்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தனது மாற்றாந்தந்தையால் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். முன்னதாக மேற்கு டெல்லியில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 வயது சிறுமி பக்கத்து வீட்டில் உள்ள 19 வயது இளைஞர் ராஜு என்பவரால் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் ராஜுவை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதே பகுதியில் வீட்டு வேலை செய்யும் 40 வயது பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோரா(24) என்பவரால் கற்பழிக்கப்பட்டார். பின்னர் கோராவை போலீசார் கைது செய்தனர். இது தவிர டெல்லி ஆர்.கே. புரம் பகுதியில் தனது வீட்டு கழிவறையில் வைத்து 10 வயது சிறுமி 16 வயது பக்கத்து வீட்டு பையனால் கற்பழிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். கிழக்கு டெல்லியில் உள்ள சீமாபுரியில் பள்ளிக்கு வெளியே 9 வயது சிறுமி 42 வயது ஆட்டோக்காரர் ஓம் பிரகாஷால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். பின்னர் ஓம் பிரகாஷ் கைது செய்ய
  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக