திங்கள், 23 செப்டம்பர், 2013

நரேந்திரமோடி, ராகுல் காந்திக்கு வாய்ப்பு இல்லை! 3–வது அணி ஆட்சி அமைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நம்பிக்கை

டெல்லி,மத்தியில் நரரேந்திரமோடி அல்லது ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்றும், 3–வது அணிக்குத்தான் வாய்ப்பு இருப்பதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யச்சூரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது–
‘நமோ – ராகா’
‘‘அடுத்த பிரதமர் ‘நமோ’தான் (நரேந்திர மோடி) என்று பா.ஜனதாவினரும், ‘ராகா’தான் (ராகுல் காந்தி) என்று காங்கிரசாரும் கூறி வருகிறார்கள். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், இந்த இரு கட்சிகளுமே இடம் பெறாத 3–வது மாற்று அணிதான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
இரு பிரதான கட்சிகளும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தங்கள் தேர்தல் கணக்குகளைப் போட்டு வருகிறார்கள். ஆனால், ஆட்சி அமைக்கும் தலைவர் யார்? என்பதை விட, மாற்று அரசியலே தற்போது மக்களுக்கு தேவையாகும்.

பொருளாதார கொள்கை
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் பொருளாதார கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. அன்னிய முதலீட்டுக்காக கதவுகளை அகலமாக திறந்து வைத்தும், எந்தவித முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. பன்னாட்டு கம்பெனிகளுக்கு லாபம் இருந்தால் மட்டுமே, அன்னிய முதலீடு இந்தியாவுக்குள் வரும்.
நம் நாட்டு மக்களுக்கு வாங்கும் சக்தியே இல்லாத நிலையில், அன்னிய முதலீடு இங்கு எப்படி வரும்? எனவே, காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளையும் தோற்கடிப்பதற்கான திட்டம் குறித்தும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவது குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
தேர்தலுக்குப்பின் 3–வது அணி
கூட்டணி கட்சிகளுடன் இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சி அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டிய நேரம் இது. தேர்தலுக்கு முன்பு இந்த 3–வது மாற்று அணி உருவாகாவிட்டால், தேர்தலுக்குப்பிறகு நிச்சயம் உருவாகும்.
வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை தேர்தலுக்குப்பின்பு உருவானவைதான்’’.
இவ்வாறு சீதாராம் யச்சூரி கூறினா  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக