சனி, 28 செப்டம்பர், 2013

தமிழ்நாட்டை சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவின் 2வது உயரிய கோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்றார்

 Born Padmanabhan Srikanth Srinivasan[3] in Chandigarh, India, Srinivasan's father hailed from Mela Thiruvenkatanathapuram, an Indian village near Tirunelveli-Tamil Nadu. His family, including two younger sisters, migrated in the late 1960s to Lawrence, Kansas.[
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீதிபதி சீனிவாசன், அமெரிக்காவின் 2வது உயரிய நீதிமன்றமான கொலம்பியா சர்க்யூட் அப்பீல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்திய அமெரிக்கர் ஒருவர், அதிலும் தெற்காசிய அமெரிக்கர் ஒருவர் இந்தப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.  தமிழ்நாட்டில் திருவேங்கட நாதபுரம், திருநெல்வேலியில் இந்த ஊர் உள்ளது ,  இந்தியர் சீனிவாசன் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அடுத்து 2வது உயரிய நீதிமன்றம் கொலம்பியா சர்க்யூட் அப்பீல் நீதிமன்றம் என்பதால் சீனிவாசன் இந்தப் பதவிக்கு வந்திருப்பது இந்தியர்களைப் பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது.  46 வயதாகும் இவரது பெற்றோர் 70களில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர். சீனீவாசனுக்கு நீதிபதி சான்ட்ரா டே ஓ கானர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரிடம் முன்பு கிளர்க் ஆக பணிபுரிந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. சீனிவாசன் பதவியேற்பில் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர் சரண் கெளரும் கலந்து கொண்டார். கடந்த மே மாதம்தான் சீனிவாசன் நியமனத்தை அமெரிக்க செனட் சபை 97-0 என்ற அபரிமிதமான ஆதரவுடன் அங்கீகரித்தது என்பது நினைவிருக்கலாம். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியே சீனிவாசனை இப்பதவிக்கு அதிபர் ஒபாமா நியமித்தார். ஆனால் கடந்த ஜனவரி 2ம் தேதி அமெரிக்க செனட் சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் நியமனம் குறித்த வரைவு அதிபருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜனவரி 3ம் தேதி மீண்டும்இந்த வரைவை ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார் ஒபாமா
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக