வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

மணல்மாபியாவிடம் விலைபோன அகிலேஷ் யாதவ் IAS அதிகாரியை நீக்கியது சரிதானாம்

லக்னோ : மத நல்லிணக்கத்திற்கு பாதிப்புவரக்கூடாது என்பதற்காகவே பெண்
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவுதம புத்தா நகர் பகுதியில், துர்கா சக்தி நக்பால், 28, என்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 10 மாதங்களுக்கு முன், உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே, கவுதம புத்தா நகர் பகுதியில், நீண்ட காலமாக அராஜகத்தில் ஈடுபட்ட, மணல் மாபியாக்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாபியாக்களை, கைது செய்து உள்ளே தள்ளினார். இதனால், துர்காவுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உ.பி., மாநில அரசு, துர்காவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

துர்கா மீது உ.பி. அரசு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டது. மேலும் ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா மீது வழிபாட்டு தலத்தின் சுவரை, எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமலும், முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும், இடிக்க உத்தரவிட்டதாக வழக்கு தொடரப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், இது குறித்து அவர் 10 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேர்மையாக செயல்பட்டவருக்கு பரிசு இது தானா என கொந்தளித்தனர்.
சஸ்பெண்ட் சரிதானாம்: அகிலேஷ்
இந்த விவகாரம் உ.பி.யில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அம்மாநில ஐ.ஏ.எஸ்.சங்கத்தினர், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையிடம் புகார் மனு ‌கொடுத்தனர். விஷயம் பெரிதாக சென்றதை உணர்ந்த அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், செய்தியாளர்களிடம் கூறுகையில், மணல் கடத்தலை தடுத்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறுவது தவறு, வழி பாட்டுத்தலத்தின் சுவரை இடிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் மாநில சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது சரியானமுடிவு தான் என்றார்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில், நேர்மையான ஒரு அரசு அதிகாரியை ஆளும் ஆட்சியாளர்கள் பழிவாங்க கூடாது என்றார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் ‌நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உத்திர பிரதேச முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். எனினும் இந்த விவகாரத்தில் ஐ.ஏ.எஸ்.சங்கத்தினர் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக