ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

ராகிங்: மதுவை பருக்கி மயக்கத்தில் ரோட்டில் போடப்பட்ட மாணவர்கள்!

தருமபுரி பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் 8 கல்லூரி மாணவர்கள் கிடந்துள்ளனர். இதனை பார்த்து பதறிய பொதுமக்கள் 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி ஊழியர்கள், மாணவர்களை சோதித்துப் பார்த்து சொன்ன விஷயம் தகவல் கொடுத்த பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
அளவுக்கு அதிகமாக மது அருந்தி, தன்னையே மறந்து, எழுந்து நடக்க முடியாத நிலையில் மாணவர்கள் இருப்பதாக தெரிவித்த அவசர ஊர்தி ஊழியர்கள், அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
மது மயக்கத்தில் இருப்பதால் அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர் மருத்துவர்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கூறும்போது, தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியல்தான் நாங்கள் படிக்கிறோம். இந்த கல்லூரியில் சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களான எங்களை அழைத்து ஓரு அறையில் அடைத்து, எங்களிடம் இருந்த பணத்தை மிரட்டி பெற்றுக்கொண்டனர். டாஸ்மாக் பாரில் மதுபானங்கள் வாங்கி வந்தனர்.
இன்று (சனிக்கிழமை) காலையில் இருந்து மாலை வரை எங்களை மது அருந்த சொல்- ரேக்கிங் செய்தனர். மாலையில் வீடு திரும்புவதற்காக எழுந்தபோது மதுபோதையில் எங்களால் எழுந்திருக்க முடியவில்லை. பின்னர் சீனியர் மாணவர்கள் எங்களை கல்லூரி பேருந்தில் ஏற்றி அனுப்பினர். நாங்கள் தருமபுரி பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்தது கூட எங்களுக்கு தெரியாது. நாங்கள் எப்படி மருத்துவமனைக்கு வந்தோம் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த செய்தி அறிந்த பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக