ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சிம்பு சொல்கிறார் ? சூரிய வெளிச்சம் உதயமாகும்! மழை எப்போதும் பெய்யாது !

அரசியல் வம்புக்கு மட்டும்
போகாமலிருந்தார் சிம்பு. அதையும் விடுவானேன்,
அவரையும் இதோ இழுத்துவிட்டுட்டோம்ல.விஜய்யின் தலைவா வெளியாகாததற்கு தனுஷ், சிம்பு போன்றவர்கள் ட்வீட் செய்திருக்கிறார்கள். சிம்புவின் ட்வீட் கொஞ்சம் ஸ்பெஷல்.படத்துக்குப் படம் அ‌ஜீத்துக்கு ஜே போடுறாரே என்று விஜய் ரசிகர்களுக்கு இவர்மீது வருத்தம். தல-யை பேசுகிறவர் தளபதியை கண்டு கொள்ளவில்லையே என அவர்களுக்கு ஆதங்கம். சிம்புவிடம் அப்படியான எந்த வித்தியாசமும் இல்லை போலிருக்கிறது. தலைவா பற்றிய ட்வீட்டில் விஜய் அண்ணா என்று பாசத்தோடு தளபதியை விளித்திருக்கிறார்.அதில், மழை எப்போதும் பெய்து கொண்டிருக்காது, சூ‌ரிய வெளிச்சம் உதயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக போய் திமுக வரும் என்பதை சூசகமாக சொல்கிறாரா சிம்பு?நெருப்பை போட்டுட்டோம், புகையை கிளப்ப வேண்டியது உங்க பொறுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக