சனி, 3 ஆகஸ்ட், 2013

ரோட்டில் விரட்டி விரட்டி அடித்தார் சேரன், மகளின் காதலர் சந்துரு

சென்னை: சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை சாலையில் ஓட விட்டு விரட்டி விட்டி அடித்தார்கள் என்று பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரனின் மகளின் காதலர் சந்துரு. இன்று காலை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திதற்கு வந்த சேரனின் மகள் தாமினியின் காதலர் சந்துரு அங்கு வாக்குமூலம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சேரன் மகள் தாமினியும் நானும் இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். சேரனுக்கு தெரிந்ததும் என்னை மிரட்டினார். மகளுடன் பேச் கூடாது என்றார். நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். அதன் பிறகு சேரனிடம் மன மாற்றம் ஏற்பட்டது. இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். சந்தோஷப்பட்டோம். இந்த நிலையில் தாமினிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து போனார். கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கில் வைத்து சேரன் பெரிய டைரக்டர் அவர் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம். நீ சினிமாவில் இருக்கிறாய் உன்னை வளர விட மாட்டோம் என்று அச்சுறுத்தினர். அப்போது சேரனும் ஆட்களுடன் அங்கு வந்தார். இவனிடம் என்ன பேச்சு என்று சொல்லி சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை அடித்தனர் நான் அங்கிருந்து ஓடினேன். ரோட்டில் என்னை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இது பற்றி எனது குடும்பத்தினருக்கு தெரிந்ததும் பயந்தனர். சேரன் செல்வாக்குள்ள டைரக்டர். அவரால் உன் உயிருக்கு ஆபத்து வரலாம். எனவே காதலை விட்டு விடு என்று நிர்ப்பந்தித்தனர். நான் மறுத்தேன். இதனால் கோவையில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டனர். என்னை சேரன் மிரட்டியது தாமினிக்கு தெரிய ஆரம்பித்து உள்ளது. இதனால் அவர் காலேஜ் போவதாக பொய் சொல்லி விட்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். எனக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள். நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லும் படி கூறினேன். காதலில் நான் உறுதியாக இருப்பேன் என்றார் அவர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக