சனி, 24 ஆகஸ்ட், 2013

ஓ ! நமக்கு வாய்த்த அடிமைகள் லிஸ்டில் பன்னீர்செல்வம் இல்லையாமே ? கடும் கோபத்தில் இதயதெய்வம்

சென்னை: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாகவும் வில் வர உள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும் பரவிய தகவலால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகி இருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தான் தற்போதைய அமைச்சர்களில் சீனியர். கடந்த சிலவாரங்களாகே மூத்த அமைச்சர்கள் மற்றும் 21 மாவட்ட செயலர்களை ஜெயலலிதா எந்த நேரத்திலும் மாற்றுவார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூத்த அமைச்சர்களில் ஓ. பன்னீர்செல்வம் தலைதான் உருட்டப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ. பன்னீர்செல்வம் மீது ஜெ. காட்டம்? கல்தா பட்டியலில் முதலிடமா? ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் மிகவும் நம்பிக்கைக்குரியவர் ஓ. பன்னீர்செல்வம் என்பதாலேயே முன்பு முதல்வர் பதவியையே கொடுத்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு இப்போது போகும் ஏகப்பட்ட புகார் கடிதங்களில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரானவை அதிகம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். அதிலும் பல புகார்களுக்கு கத்தை கத்தையாக ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டு முதல்வர் ஜெயலலிதா அதிர்ந்து போனாராம்.
கொடநாட்டில் இருந்த போதே ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா செம டோஸ் விடுத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் அமைச்சரவை மாற்றத்தின் போது நிச்சயம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கல்தா இருக்கும் என்று உறுதியாக கூறுகின்றனர் அதிமுகவினர். ஆக கல்தா பட்டியல் ரெடியோ?
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக