ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஆந்திராவில் காங்கிரசின் எதிர்காலம் கேள்விகுறி ? முதல்வர் கிரண்குமார் அச்சம்

ஐதாராபாத்: தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி அடுத்து வரும் பொது தேர்தலில் வெறறி பெறுவது கடினம் என மாநில முதலவர்
அச்சம் தெரிவித்துளளார். ஆதரவும் எதிர்ப்பும் : ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றியது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்‌டீரிய சமிதி கட்சி தீவரமாக போராடி வந்தது. தனி தெலுங்கானா காங்கிரஸ் அமைக்கும் பட்சத்தில் டிஆர்எஸ் கட்சியை கலைத்த விட்டு காங்கிரசில் ஐக்கியமாவோம் என அக்‌கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார். அவர் கூறியதை போல் விரைவில் காங்கிரஸ் கட்சியுடன் டிஆர்எஸ் இணைய உள்ளது.

அதே நேரம் ஒன்று பட்ட ஆந்திரமாநிலம் பிரியாது என்ற நம்பி்க்கை வைத்திருந்த ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்களது நம்பி்கை பொய்த்து போனதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனித்தனியாகவும் கூட்டு குழுவாகவும் சேர்ந்து தங்கள் ராஜினாமா கடிதங்‌களை மாநில சபாநாயகர், மாநில ‌கட்சிதலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் அளித்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் திணறி வருகிறது.
முதல்வர் அச்சம்:


இந்நிலையில் ஆந்திராவில் ‌காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ளார் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி: தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு காங்கிரஸ் எடுத்த முடிவு துரதிருஷ்டமானது. இதனால் மாநில அளவில் மட்டுமல்லாது இந்திய அளவில் காங்கிரஸ் கட்‌சிக்கு பின்னடவை உருவாக்கியுள்ளது. மேலும் வரும் பொது தேர்தல் மட்டுமல்லாது தொடர்ந்து குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை கட்சியால் எழுசசி பெற முடியாது என கிரண்குமார் கூறியுள்ளார்.
இதே கருத்தை மாநிலத்தை கவனித்து வரும் மேலிட பார்வையாளரான திக்விஜய்சிங்கிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே கருத்தை வலியுறுத்திய மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியநாராயணா கட்‌சியின் முடிவு வலியை தருவதாகவும், அதற்காக தான் எந்த ஒரு பதவியையும் ராஜினாமா செய்யப்போவதி‌ல்‌லை என கூறினார்.
சிரஞ்சீவி ராஜினாமா இல்லை:


தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா , ராயலசீமா பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவரும் வேளையில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா ‌செய்ய வில்லை. இது குறித்து அவர் கூறுகையில் தனி தெலுங்கானாவிற்காக நான் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. பதவி இருந்தால் தான் உரிமைக்காக போராட முடியும். என கூறியுள்ளார் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக