திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பெண் மீது உடைத்த பீர் பாட்டிலை வைத்து பலாத்காரம் செய்தான்

 மும்பை பெண் புகைப்பட நிபுணர் பலாத்கார வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர். சந்த் பாபு சத்தார் சேக் என்ற முகமது அப்துல், விஜய் ஜாதவ், சிராஜ் ரெஹ்மான் சேக், காசிம் பங்காலி, முகமது சலீம் அன்சாரி ஆகியோர் ஆவர்.கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. பெண் புகைப்பட நிபுணரை பீர் பாட்டிலை உடைத்து, அதை அவரது கழுத்தில் வைத்து மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொடூர இந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், இந்த ஆபாச காட்சியை வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளனர்.டந்த சம்பவத்தில் காசிம் பங்காலி கொடூர குற்றவாளி ஆவான். அவன் அந்த பெண்ணை இரு முறை பலாத்காரம் செய்துள்ளான். போலீசார், சம்பவ இடத்தில் கிடந்த உடைந்த பீர் பாட்டிலையும், முதலில் பிடிபட்ட முகமது அப்துலின் உடை உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர். கைதான 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக