வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பூமிகாவின் பொழுதை களவாடியது எதுவோ ?


தங்கர் பச்சான் என்றாலே
சர்ச்சை என்று ஒரு
முகம் உண்டு. மற்றொரு முகம்,
வித்தியாசமான டைரக்டர். கடைசியாக வெளியான சில படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும், அழகியில் தொடங்கி, தங்கரின் முத்திரை பதித்த படங்கள் சில இன்னமும் பேசப்படும் படங்களாக உள்ளன.
தங்கர் கடைசியாக இயக்கி, தற்போது வெளியாக தயாராக உள்ள படம் களவாடிய பொழுதுகள். இந்தி சினிமாவில் பிரபல இயக்குனராகி விட்ட நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா, தமிழில் கடைசியாக நடித்த படமும் களவாடிய பொழுதுகள்தான்.
இந்த படத்தில் பிரபுதேவாவுடன் பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் நன்றாக வந்திருக்கிறது என்று இன்ட்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு உள்ளது. ஆனால், வர்த்தக ரீதியில் நன்றாக போகுமா என்ற பயம், விநியோகஸ்தர்களுக்கு உண்டு. இதனால், படம் முடிந்த நிண்ட காலமாகியும், இன்னமும் ரிலீஸ் செய்யப்படாமலேயே உள்ளது.
திரைக்கு வர முடியாத சில சிக்கல்களில் சிக்கியிருந்த இப்படத்தை தற்போது மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வெளியே கொண்டு வருகிறார்கள்.

பிரபுதேவா, தான் நடித்ததில் வித்தியாசமான படம் என்பதால், இப்படம் எப்போது திரைக்கு வருகிறது என்று அடிக்கடி தங்கர்பச்சானுக்கு போன் போட்டு கேட்பாராம். இதோ, அதோ என்று சொல்லி வந்தவ தங்கர், திடீரென்று ஒருநாள் போன் போட்டு செப்டம்பரில் படம் ரிலீஸ் ஆகிறது என்ற சந்தோஷ செய்தியை சொன்னாராம்.
சமீபகாலமாக எந்த தமிழ் சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமலிருக்கும் பிரபுதேவா, இந்த படத்துக்காக சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார். அந்தளவுக்கு இந்தப் படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், மெகா வெற்றி மசாலா டைரக்டராகி விட்ட பிரபுதேவா.
பிரபுதேவா என்ன சொல்கிறார்? “நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படம். நான் நடித்தேன் என்று சொல்ல முடியாது. தங்கர்பச்சான் சொன்னதை செய்தேன். வா உட்காரு, எழுந்து செல், இந்த வார்த்தையை பேசு என்பார். அதைத்தான் செய்தேன். ஆனால், ஒரு உயிரோட்டமான கதை. நடித்த எனக்கு முழுதிருப்தி கிடைத்தது.
இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு எனது நடிப்பை புகழ்ந்தால், அது அத்தனையும் தங்கர் பச்சானைத்தான் சேரும்” என்று சொன்ன பிரபுதேவா, “இந்த களவாடிய பொழுதுகள், காதலிக்கப்போகிறவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், காதலை மறக்க முடியாமல் சுமந்து திரிபவர்கள் என எல்லோருடைய மனதையும் களவாடும்” என்றார்.
தற்போது வெளியாகும் ‘களவாடிய பொழுதுகள்’ ஸ்டில்ஸ்களை பார்க்கும்போது, இது ஒரு வித்தியாசமான காதல் கதையாக இருக்கலாம் என்றே படுகிறது.
தங்கர் பச்சான் போன்றவர்கள் எடுக்கும் படங்களில் ஒரு பொதுவான அம்சம் உண்டு. சமூக அவலங்களை எடுக்கிறோம், சீர்திருத்த கருத்துக்களை ஹைலைட் செய்கிறோம் என்று புறப்பட்டால், படம் செம ட்ரையாக இருக்கும். ஓடாது. மாறாக, வித்தியாசமான காதல் கதைகள் இவர்களிடம் இருந்து வரும்போது, யாரும் எதிர்பாராத அளவில் ஓகோ என்று ஜெயிப்பதுண்டு.
கீழேயுள்ள இணைப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ ஸ்டில்ஸ்களை பாருங்கள். ஸ்டில்ஸ்கள் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதை உணர்வீர்கள். அடுத்த மாதம் படம் ரிலீஸ் என்கிறார்கள்.. எதற்கும் ஸ்டில்ஸை பார்த்து வையுங்களேன். அப்புறம் நாலு பேரை விசாரித்து முடிவு செய்யலாம்
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக