வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு ! தலைவாவை நிஜமாகவே தலைவராக்கும் முயற்சியில் ஜெயலலிதா ?

சென்னை: தலைவா படம் ரிலீசாகாததால் தமிழக அரசுக்கு எதிராக விஜய் தரப்பில் வழக்குத் தொடரப் போவதாக பரபரப்பாக செய்திகள் கிளம்பியுள்ளன. தலைவா படம் பழசாகிவிட்டாலும், அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகள், அதற்கு விஜய் தரப்பு எதிர்த்தும் எதிர்க்காமலும் காட்டும் எதிர்வினைகள்தான் சுவாரஸ்யமான செய்திகளாக உலா வருகின்றன. நாளை இந்தப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விஜய் தரப்பு அறிவித்து, அரசிடம் அனுமதியும் கோரியது. ஆனால் கேட்ட சில மணி நேரங்களில அனுமதி மறுத்துவிட்டது தமிழக அரசு. என்னது... தமிழக அரசுக்கு எதிரா விஜய் கேஸ் போடப் போறாரா? வழக்கு? இப்போது புதிய திருப்பமாக, கமல்ஹாஸன் ஸ்டைலில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடரப் போகிறார் என செய்திகள் கிளம்பியுள்ளன. நாளை உண்ணாவிரதம் கேன்சலான நிலையில், படத்தை வெளியிடும் சூழலை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடரப் போகிறார்களாம் விஜய் தரப்பில். இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் விஜய் விவாதித்து வருகிறாராம். இந்த முடிவு உண்மைதானா என அறிய விஜய்யின் மேலாளர் பிடி செல்வகுமாரைத் தொடர்பு கொண்டோம். அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக மறுமுனையில் அறிவிப்பு வந்தது!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக