ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

திருப்பதியை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

திருப்பதி, காளஹஸ்தி,
சித்தூர், சத்தியவேடு மற்றும் கேரள மாநிலத்தில் இந்தியாவில் மொழி வாரியாக மாநிலம் பிரியும் போது இந்த பகுதிகள் விருப்பம் இன்றி ஆந்திரா-கேரளாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. இங்குள்ளவர்களில் அதிகம் பேர் தமிழ்மொழி பேசும், தமிழ் கலாச்சாரத்தை கொண்டவர்களாக உள்ளனர். எனவே மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் போது, ஆந்திரா, கேரளாவில் தமிழ்பேசும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
உள்ள இடுக்கி ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி தமிழர் நில மீட்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று நடைபெற்றது.
தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்பை சார்ந்த பிரமுகர்கள் ஆர்ப்பாட்டதில் பங்கேற்றனர். இதில் தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த பொதுச் செயலாளர் வேலுமணி பேசியதாவது:- >ஆந்திராவில் தெலுங்கானா புதிய மாநிலம் அமையும் நேரத்தில் சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சித்தூர், நெல்லூர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க அங்குள்ள மக்கள் விரும்புவதால் மத்திய அரசு இந்த பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக