செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தலைவா ? நிஜ வெற்றி திமுகவுக்கே ! ஜே அன்பழகனின் ட்விட்டர் தான் காயை நகர்த்தியது


Untitled-1”தலைவா மேட்டர்தானேடா ஹாட் டாப்பிக் ? ”

”தலைவாதாண்டா ஹாட் டாபிக்.  ஆனா தலைவா மட்டுமா ஹாட் டாபிக் ? ”

”சரி இந்தப் பிரச்சினை எப்படிதாம்பா முடிவுக்கு வந்துச்சு ? ” என்றார் கணேசன்.

”தலைவா படப்பிரச்சினையை திமுக கையில எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும்தான் அரசாங்கம் வேக வேகமாக களமிறங்குச்சு.  படம் வெளியாகலைன்னதும், தயாரிப்பாளர் சார்பில உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாங்க. ஆனா அனுமதி வழங்கப்படல.  விஜய் தரப்புல ஏதாவது வேகமா செய்யப்போறாங்கன்னு எதிர்ப்பார்த்தா, விஜய் தரப்பு படத்தை வெளியிடறதுக்கு யார் கால்ல வேணா விழறதுக்கு தயாரா இருந்தாங்க. அதனால அரசாங்கமும் மெத்தனமா இருந்துச்சு..

இந்த நேரத்துலதான், கருணாநிதி இரண்டாவது முறையா இந்தப் படம் தொடர்பா பேட்டியளிச்சார்.   விஜய் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, ஒரு படைப்பாளியாக என்ன நினைக்கிறீர்கள்னு கேட்டதுக்கு ஒரு படைப்பாளியாக பதைபதைக்கிறேன்னு பதில் சொன்னாரு.

அன்னைக்கு, மதுரவாயல் உயர்வழிச்சசாலை திட்டம் நிறுத்தப்பட்டது தொடர்பா கைது செய்யப்பட்டிருந்த திநகர் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ட்விட்டர்ல, 300 தியேட்டர்களில் தலைவா படத்தை வெளியிட நான் தயார்னு எழுதியிருந்தாரு.
உடனே அரசாங்கம் களமிறங்குச்சு.  மள மளன்னு காரியங்கள் நடந்தது.  தலைவா படத் தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்குற “TIME TO LEAD” எடுக்கணும்னு சொன்னாங்க.  சில வசனங்களை கட் பண்ணச் சொன்னாங்க. எல்லாத்துக்கும் விஜய் தரப்பு ஒத்துக்கிச்சு. மறுநாள் ஞாயித்துக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யலாம்னு முடிவெடுத்தாங்க.  சென்னையில தியேட்டர்கள் இருந்தாலும், வெளியூர்கள்ல தியேட்டர்கள் இல்லாததாலயும், TIME TO LEAD எடுக்கறதுக்கு இரண்டு நாள் அவகாசம் வேணும்னும், செவ்வாய்க்கிழமை படத்தை வெளியட்றதுன்னு முடிவெடுத்துட்டாங்க.


திமுக இந்த விவகாரத்தை கையில எடுக்கறதைப் பாத்ததும்தான் ஜெயலலிதாவுக்கு பிரச்சினை கை மீறிப் போயிடுமோன்ற பயம் வந்துச்சு.”

”விஜய் தரப்பு ஏன் இவ்வளவு அமைதியா இருந்தாங்க… ? ”
”விஜய்க்கு அரசியல்வாதியா ஆகணும்னும் ஆசை…  ஆனா அதுக்காக வியாபாரத்தை இழக்கவும் தயாரா இல்லை.  படம் வெளியில வர்லன்னு தெரிஞ்சதுமே, தன் வீட்லயே உண்ணாவிரதம் அறிவிச்சிருந்தார்னா, கூட்டம் சேந்துருக்கும். விஜய்க்கும் போராடக்கூடியவர்ன்ற ஒரு இமேஜ் கிடைச்சிருக்கும்.  ஆனா, அதை விட்டுட்டு, அப்பாயின்ட்மென்ட் இல்லாம கோடநாட்ல போயி காத்திருக்கறது.., அம்மாவைப் போல சிறப்பான ஆட்சி நடத்தறதுக்கு இந்தியாவிலயே ஆள் இல்லைன்னு பேட்டி தர்றது, இதெல்லாம் தன்னோட நலனுக்காக, கால்ல விழத் தயாரா இருக்கற விஜய்க்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் வித்தியாசமே இல்லைன்னு   ஆயிடுச்சு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக