சனி, 24 ஆகஸ்ட், 2013

பிடிபட்ட மும்பை பாலியல் குற்றவாளி விலாவாரியாக விபரித்தான் ! 2வது குற்றவாளியும் கைது

மும்பை: மும்பையில் இளம் பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்துவிட்டு சாவகாசமாக வீட்டில் போய் பாவ்பாஜி சாப்பிட்டுள்ளான் குற்றவாளி சந்த். மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மாலை 6-லிருந்து 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் இரவு 8.30 மணியளவுக்கே போலீஸ்க்கு தெரியவந்தது. முன்னதாக 8 மணியளவில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரான சந்த் அப்துல் என்பவனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் போய் சாவகாசமாக வீட்டிற்குப் போய் பாப்பாஜி சாப்பிட்டது தெரியவந்துள்ளது. ஜெய் பவானி நகரில் பாட்டியுடன் வசித்து வந்த சந்த் அப்துல்க்கு பெற்றோர்கள் கிடையாது. வியாழன்று மாலை 5.30 மணியளவில் அவனது நண்பர்கள் போன் செய்து சந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். உடனே கிளம்பி போன அவன் சில மணிநேரத்தில் திரும்பி வந்துவிட்டதாக பாட்டி கூறியுள்ளார். பலமுறை கெட்ட நண்பர்களுடன் சேரவேண்டாம் என்று எச்சரித்தும் கேட்காமல் அவன் இவ்வாறு செய்துவிட்டதாக கூறினான். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரும் போது பாவ்பாஜி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு உறங்க போய்விட்டான் என்று அவனது பாட்டி கூறியுள்ளார்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக