வியாழன், 22 ஆகஸ்ட், 2013

தயாளு அம்மையார் டெல்லி நீதிமன்றில் ஆஜராகவேண்டியதில்லை ! அவரிடம் சென்னையிலேயே விசாரிக்கலாம்

புதுடெல்லி,
http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/dayalu-ammal.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக டெல்லி தனிக்கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து தயாளு அம்மாளுக்கு விதிவிலக்கு அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, கமிஷன் ஒன்றை அமைத்து அவரிடம் சென்னையில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு உள்ளது.
தயாளு அம்மாள்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் பற்றி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.க்கு குசேகான் புரூட்ஸ் மற்றும் வெஜிடபிள்ஸ் நிறுவனம், சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்பட்டு உள்ளது.
இதனால் இந்த வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். திட்டமிட்டு புனையபட்ட இந்த வழக்கில் மிகபெரும் மர்மம் என்னவென்றால் மாறன் பிறதேர்ஸ் மீது ஒரு தூசும் படாது காய்கள் நகர்த்தப்படுகின்றன

மருத்துவ குழு பரிசோதனை
இதனால் வழக்கில் சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு கோரி தயாளு அம்மாளுக்கு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் தயாளு அம்மாளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை தனிக்கோர்ட்டு நிராகரித்ததால், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் டெல்லி ஐகோர்ட்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகுமாறு கூறியது.
இதனால், தனிக்கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து தயாளு அம்மாளுக்கு விலக்கு அளிக்குமாறு கோரி அவரது மகள் செல்வி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, தனிக்கோர்ட்டில் ஆஜராகும் அளவுக்கு தயாளு அம்மாளின் உடல்நிலை உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அமைக்குமாறு கடந்த ஜூலை 10–ந் தேதி டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (எய்ம்ஸ்) இயக்குனருக்கு உத்தரவிட்டது.
அதன்படி அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் சென்னை வந்து தயாளு அம்மாளின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு சென்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 4 மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிப்பதில் இருந்து தயாளு அம்மாளுக்கு விலக்கு அளிப்பது என்ற கேள்விக்கே இடம் இல்லை. மருத்துவ குழுவினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தயாளு அம்மாளின் உடல் நிலை பயணம் செய்யக்கூடிய அளவுக்கு இல்லாததால், தனிக்கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க தகுதியான நிலையில் அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கமிஷன் அமைத்து சென்னையில் விசாரணை
எனவே தனிக்கோர்ட்டு ஒரு கமிஷனை நியமித்து, அதன் மூலம் தயாளு அம்மாளிடம் அவர் வசிக்கும் சென்னையிலேயே விசாரணை நடத்த வேண்டும். அப்படி ஒரு கமிஷன் அமைப்பதன் மூலம் அவரிடம் விசாரணை நடத்தும் நோக்கம் நிறைவேறும் என்று நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக