சனி, 17 ஆகஸ்ட், 2013

அம்பானிக்கு நீதிமன்றம் குட்டு ! சட்டத்தின் முன் அனைவரும் சமமே ! ஆஜாராகியே தீரவேண்டும் !

2ஜி அலைக்கற்றை வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய
சம்மனை எதிர்த்து, அனில் அம்பானி தம்பதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இது தொடர்பான மனுவை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது அம்பானி தம்பதி சார்பில் வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார்,சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் வாதாடினார்,இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், "சட்டத்தின் முன்பு குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியாகவே கருதப்படுவர். சமூகத்தில் செல்வாக்குப் படைத்தவர்கள், செல்வாக்குக் குறைந்தவர்கள் என பேதம் பார்க்கப்படுவதில்லை.
மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக வரும் 21-ஆம் தேதி விசாரிக்கப்படும்' என்று கூறினர்.>இதையடுத்து, முகுல் ரோத்தகி, "அதுவரை 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் அனுப்பியுள்ள சம்மனுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அது குறித்து நீதிபதிகள் கருத்துத் தெரிவிக்கவில்ல nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக