செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

தலைவா திருட்டு சி டியை கண்டும் காணாமல் நடிக்கும் தமிழக போலீஸ்

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் திரைக்கு வருவதில் பல சிக்கல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தலைவா படம் திருட்டு சி.டிகளாக விற்கப்படுகிறது. மற்ற சி.டிகளை விட 10 ரூபாய் விலை அதிகமாக விற்கிறார்கள் அவற்றை தடுக்க வேண்டும் என்ற அறந்தாங்கி காவல் நிலையத்தில் விஜய் ரசிகர்கள் புகார் சொல்லியும், தலைவா சி.டி விற்கவில்லை அங்கு சிங்கம் 2 சி.டி தான் விற்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் பொருப்பாக இருக்கும் அதிகாரி பதில் சொல்லி அனுப்பியுள்ளார். (சிங்கம் 2 சி.டி யும் திருட்டு சி.டி தான் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத அந்த அதிகாரி.)
இதைப் பார்த்த ரசிகர்கள், தலைவா சி.டி விற்பனை செய்யும் கடைக்கு முன்பு திரண்டு கடைக்குள் நுழைந்து கடையை அடித்து நொறுக்கியதுடன், அனைத்து சி.டி களையும் வெளியில் அள்ளிவந்து உடைத்தார்கள். திருட்டு சி.டி விற்ற குணசேகரன் மீது நடவடிக்கை எடு என்று கோஷமும் போட்டனர். ஆனால் அதன் பிறகும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனியும் காவல் துறையை நம்பி பயனில்லை. நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விஜய் ரசிகர்கள் அடுத்த ஊர்களில் சி.டி விற்பனை நடக்கிறதா என்று கண்காணிக்க புறப்பட்டுவிட்டனர்.
- செம்பருத்திnakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக