புதன், 21 ஆகஸ்ட், 2013

மாஸ் காட்டி காசு பண்ணும் கீரோக்கள்/வியாபாரிகள் தலைவர்களாக வேஷம் போடுவது கொடுமை !

தமிழ்த் திரையுலகில் மாஸ் காட்டி காசு பண்ணும் முன்னணி நடிகராக இருந்த விஜய்யின் தலைவா பட பிரச்சனையில் முதன்முதலில் சப்போர்ட் செய்தவர் தனுஷ் தான்.ஒரு பிரச்சனை ஏற்படும்போது பல யூகங்கள் ஏற்பட்டு பிறகு தான் முக்கிய காரணம் தெரியவரும். ஆனால் முதல் குரலிலேயே பிரச்சனையின் ஆணிவேரை கண்டுபிடுத்து அடித்தவர் தனுஷ்(அதன்பிறகு அவர் அந்தர் பல்டி அடித்தது வேறு விஷயம்).இப்படி தலைவா பட பிரச்சனை மட்டுமல்லாமல் விஜய்க்கும் தனுஷுக்கும் வேறு ஒரு ஒற்றுமையும் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
தலைவா திரைப்படத்தில் ஒன்றுமறியாத பாப்பாவாக வந்து, பிற்பாதியில் கச்சிதமான போலிஸ் கெட்-அப்பில் கலக்கிய அமலாபாலை, தனுஷ் அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கும் ’வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் ஹீரோயினாக செலக்ட் செய்திருக்கிறாராம். (நஸ்ரியா நசீம், அமலா பால் என மார்கெட்டில் முன்னணியில் இருக்கும் நடிகைகளையே தனுஷ் தனது படங்களுக்கு பரிந்துரை செய்வதாக தகவல நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் தனுஷ் பல படங்களில் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றும் கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஒரு நடிகராக ஃபார்ம் ஆன பிறகு கௌரவமான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கத்துவங்கினார். தற்போது மறுபடியும் வேலையில்லா பட்டதாரி கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக