சனி, 3 ஆகஸ்ட், 2013

கரும்பு காட்டில் யானைகள் விடிய விடிய அட்டகாசம்

கள்ளக்குறிச்சி: அரூர் வனப்பகுதியில் இருந்து வந்த 6 யானைகள் சேலம்
 வனத்துறையினர் யானைகளை விரட்டியபோது தகரை கிராமத்தைச்சேர்ந்த அத்தியப்பன் மகன் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்புத்தோட்டத்திற்குள் இரவு 11.30 மணிஅளவில் புகுந்தன. வாணவெடிகளை வெடித்தபோதும் யானைகள் கூட்டம் அங்கிருந்து செல்லாமல் கரும்புக்காட்டுக்குள்ளேயே சுற்றி வந்தன. இரவு கரும்புத்தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் வெளியேறின. 6 மணிநேரம் அதே கரும்புக்காட்டிலேயே முகாமிட்ட யானைகள் பயிர்களை நாசம் செய்தன. ஏராளமான கரும்புகளையும் தின்று தீர்த்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இன்று காலை வெளியேறிய யானைகள் தற்போது  கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கல்லாநத்தம் அடிப்பெருமாள் அருகில் உள்ள வனப்பகுதியில் 6 யானைகளும் முகாமிட்டுள்ளன. இதனால் கிராமத்திற்குள் நுழைந்து விடுமோ என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

மாவட்டம் கருமந்துறை காட்டில் கடந்த மூன்று நாட்களாக முகாமிட்டுள்ளன. இதையடுத்து ஆத்தூர் வனச்சரகர் தயாளன் தலைமையில் வனவர் கருப்பண்ணன், வனப்பாதுகாப்பு குழுவினர் வாணவெடி மூலம் யானைகள்கூட்டத்தை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் காட்டுக்குள் செல்லாமல் தும்பல், பாப்பிநாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் வழியாக ஆத்தூர் பகுதிக்குள் நுழைந்தன. அங்கும் வனத்திற்குள் விரட்ட முயன்றபோது யானைகள் தலைவாசல், சிறுவாச்சூர், ஊனத்தூர் கிராமப்பகுதிகளில் நுழைந்து நெல், மரவள்ளி, கரும்பு, வாழை போன்ற பயிர்களை சூறையாடின. இதற்கிடையே நேற்று மாலை சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமத்திற்குள் 6 யானைகளும் புகுந்தன. இதனால் பீதியடைந்த கிராம மக்கள் யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கேயே நின்றன. பின்னர் கள்ளக்குறிச்சி வனப்பாதுகாவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வனத்துறை ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக